பெங்களுரூ: தினந்தோறும் இன்போசிஸ் நிறுவனத்தை பற்றி எதேனும் ஒரு செய்தி வந்து கொண்டே தான் இருக்கிறது, இதில் பல நிறுவனத்திற்கு பாதகமாகவும், சில சாதகமாகவும் உள்ளது. இந்நிலையில் தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் ஒரு புதிய தீப்பொறி கிளம்பியுள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓ-வாக இருக்கும் ஷிபுலால் தனது பதிவிக்காலம் முடிந்து நிறுவன பொறுப்புகளில் இருந்து விலகுகிறார் இதனால் இப்பதவிக்கு யாரை புதிய சீஇஓ-வாக இன்போசிஸ் நிறுவனம் நியமிக்கப்போகிறது என்ற கேள்வி தான் இந்நிறுவனத்தில் தீக்குழம்பாய் எறிந்துக்கொண்டு இருக்கிறது.
இன்போசிஸ் நிறுவனத்தின் உயர்மட்ட தகவலின் படி புதிய சீஇஓ பதவிக்கு 6 பேர் தேர்ந்தெடுக்கபட்டுள்ளனர். இதில் இரண்டு பேர் இன்போசிஸ் நிறுவனத்தை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது. இந்த 6 பேர் யார்??
விஷால் சிக்கா
இவர் எஸ்ஏபி நிறுவனத்தின் நிர்வாக குழுவின் முத்த உறுப்பினராக இருந்தவர். மேலும் இவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் அதவாது மே 4ஆம் தேதி தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நிறுவனத்தில் இருந்து விலகினார். இவரை இன்போசிஸ் நிறுவனம் தன் பக்கத்தில் சேர்த்துக்கொள்ள அதிகப்படியான முயற்சிகளை எடுத்து வருகிறது.
பிரான்சிஸ்கோ டிசோசா
சிடிஎஸ் நிறுவனத்தின் சீஇஓவான இவர் இந்நிறுவனத்தின் தூண் என போற்றப்படும் அளவிற்கு நிர்வாக பொறுப்பில் பணியாற்றியுள்ளார். மேலும் இவர் இந்நிறுவனத்தில் 2007 முதல் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சலீல் பரேக்
கேப்ஜெமினி நிறுவனத்தின் சீஇஓவான இவர் இந்நிறுவனத்தில் 2011ஆம் ஆண்டு முதல் அப்பிளிகேஷன் துறையின் சீஇஓவாக பணியாற்றி வருகிறார்.
சங்கர் அன்னாசுவாமி
ஐபிஎம் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனரான சங்கர் அன்னாசுவாமியும் இந்த போட்டியில் இறங்கியுள்ளர் என்பது குறிப்பிடதக்கது.
யு.பி. பிரவின் ராவ்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக தலைவராக இருப்பவர், இவரின் பணிகள் நிறுவனம் பல பரிமானங்களில் வலிமைபெற்றது.
பி.ஜி. ஸ்ரீனிவாஸ்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் மட்ட குழுவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்.
நிறுவன ஊழியர்களின் எதிர்ப்பார்ப்பு
இன்போசிஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் மத்தியில் பி.ஜி. ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு மிகப்பெரிய மரியதை உண்டு இதனாள் ஊழியர்கள் அனைவரும் இவரது வருகை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
நிர்வாக எதிர்ப்பார்ப்பு
ஊழியர்களுக்கும் நிர்வாகத்திற்கும் எப்போதுமே ஒத்துவராது, இதன் அடிப்படையில் இன்போசிஸ் நிர்வாகம் விஷால் சிக்கா அவர்களை நியமிக்க மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு வருகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications