பொருளாதார வளர்ச்சிக்கு தடையாக இருப்பது பணவீக்கம் மட்டுமே!! ரகுராம் ராஜன்..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆக்ஸ்போர்டு: இந்தியாவின் வளர்ச்சி இன்னும் சில மாதங்களில் 5 சதவீத வளர்ச்சியை அடையும் என ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜன் ஆணித்தரமாக தெரிவித்தார்.

 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட ரகுராம் ராஜன் நாட்டின் பொருளாதாரம் 5 சதவீத வளர்ச்சியை சராசரியாக நிலைபடுத்த பல வகையாக முயற்சிகளை செய்து வருகிறோம் இதன் எதிரொலி அடுத்த சில மாதங்களில் தெரியும் என அவர் தெரவித்தார்.

பணவீக்கம்

பணவீக்கம்

தற்போது உள்ள சூழ்நிலையில் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தலைவலியாக இருப்பது பணவீக்கம் தான். பணவீக்கத்தால், நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்க வாய்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

முட்டுக்கட்டை

முட்டுக்கட்டை

இந்திய பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது பணவீக்கமே, இதனால் வளர்ச்சியை மேம்படுத்தவும், பணவீக்கத்தை குறைக்கவும் அனைத்து வகையான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம் என அவர் தெரிவித்தார்.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

மேலும் இந்தியாவில் நடைபெற்று வரும் தேர்தலின் முடிவுகள் இந்திய பொருளாதாரத்தில் ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார். இத்தகைய ஆட்சி மாற்றத்தால் ஏற்றுமதி, இறக்குமதி, பணவீக்கம், டாலர் மதிப்பு மற்றும் கச்சா எண்ணெய் அகியாவற்றில் ஒர் சிறந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்
 

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்

இந்த பல்கலைக்கழகத்தில் இதுவரை இரண்டாம் எலிசேபெத், தலாய் தாமா, மற்றும் அன்னை தெரசா ஆகியோர் சொற்பொழிவை ஆற்றியுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Inflation is standing in the way of India's growth: RBI Governor Rajan

Reserve Bank of India (RBI) Governor Raghuram Rajan has expressed optimism on India's growth rate going beyond the 5 percent mark soon.
Story first published: Tuesday, May 6, 2014, 15:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X