"ரிஸ்க்" எடுத்தால் "ரஸ்கு" சாப்பிடலாம்!! ஹை-பீட்டா பங்குகள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவர இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஹை-பீட்டா பங்குகளை, பங்கு சந்தை முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்வது அவசியம்.

அதென்ன ஹை-பீட்டா பங்குகள்? இவற்றில் ரிஸ்க் அதிகம், அதேபோல் லாபமும் அதிகம். வர்த்தக சந்தையில் இப்பங்குகள் 1% சரிந்தால் இவற்றின் மதிப்பு 10% வரை குறைந்து விடும். அதிகரித்தாலோ இவற்றின் மதிப்பும் தாறுமாறாகக் கூடும்.

அத்தகைய 5 சூப்பர் ஹை-பீட்டா பங்குகள் இதோ உங்களுக்காக...

எச்.டி.ஐ.எல்.

எச்.டி.ஐ.எல்.

ரிஸ்க் எடுக்க சம்மதமா? மும்பையைச் சேர்ந்த இந்த ரியல் எஸ்டேட் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம். இது ஹை-பீட்டா ரகத்தைச் சேர்ந்த பங்குகள். வர்த்தகம் சிறப்பாக இருந்தால் இவற்றின் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயரும். வர்த்தகம் சரிந்தால் நிறைய பணத்தை இழக்க வேண்டி வரும். இப்போது முடிவு உங்கள் கையில்.

கனரா வங்கி

கனரா வங்கி

இதுவும் அதிக ஹை-பீட்டா ரகத்தைச் சேர்ந்தது. யூனியன் வங்கி மற்றும் ஓரியண்டல் வர்த்தக வங்கி போன்ற பொதுத் துறை வங்கிகளின் வரிசையில் கனரா வங்கி உள்ளது. இதிலும் ரிஸ்க் எடுத்தால் 'ரஸ்க்' சாப்பிடலாம், ரஸ்க் என்ன புல் மீல்ஸ் சாப்பிடலாம்.

ஐ.எஃப்.சி.ஐ.

ஐ.எஃப்.சி.ஐ.

ஒவ்வொரு நாளும் இதன் பங்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐ.எஃப்.சி.ஐ. ஒரு அரசுத் துறை நிறுவனம் என்பதால், தேர்தல் முடிவுக்குப் பின் இப்பங்குகளின் மதிப்பு ஒரேயடியாக ஏறலாம் அல்லது மொத்தமாக இறங்கவும் வாய்ப்புள்ளது, இதனால் முதலீட்டாளர்களுக்கு இப்பங்குகளில் குறைவான பணத்தை மட்டும் முதலீடு செய்ய அறிவுறுத்தபடுகின்றனர்.

என்.சி.சி.

என்.சி.சி.

என்.சி.சி. பங்குகள் ஏற்கனவே சிறப்பான ஏற்றத்தில் உள்ளன. குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராகும் பட்சத்தில் இதன் மதிப்பு இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழும நிறுவனப் பங்குகளும் ஏற்கனவே மிகப் பெரும் உயர்வை அடைந்துள்ளன. தற்போது இந்த நிறுவனத்தின் தலைவர் கௌதம் அதானியும் மோடியும் நெருங்கிய நண்பர்கள் என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த ஒரு மாத காலத்தில் குஜராத் நிறுவனங்களின் பங்குகள் அனைத்தும் சிறப்பான வளர்ச்சியை அடைந்துள்ளது குறிப்பிடதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 high beta stocks to consider before election results

The five stocks that we are writing about are high beta stocks, which can either make profits or erode your capital significantly. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X