வங்கிக் கடனை திருப்பி செலுத்தாத நிறுவனங்களில் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முதல் இடம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: வங்கிகளில் கோடி கணக்கில் கடன் பெற்று திரும்ப செலுத்தாத 406 நிறுவனங்களின் பட்டியலை அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் (AIBEA) செவ்வாய் கிழமையன்று வெளியிட்டது.

 

இச்சங்கம் வங்கிகளில் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கடன் பெற்று அதை திரும்ப பெறாத நிறுவனங்களை இப்பட்டியலில் தொகுத்து வழங்கியுள்ளது. மேலும் இதை கிரிமினல் குற்றமாகவும் கருதுகிறது.

இப்பட்டியலில் முதல் இடத்தைப்பிடிப்பது நாம் அனைவரும் எதிர்பார்த்தபடி கிங்பிஷர் ஏர்லைன்ஸ் தான். மேலும் இப்பட்டியலில் இடம்பெற்ற பிரபலமான மற்ற நிறுவனங்களை பார்போம்..

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

கிங்பிஷர் ஏர்லைன்ஸ்

இந்நிறுவனத்தின் கடன் தொகை 2,673 கோடி ரூபாய் என இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் மற்றொரு வங்கி அறிக்கை இந்நிறுவனம் சுமாப் 17 நிதி நிறுவனங்களில் கடன் தொகையாக சுமார் 7,000 கோடி ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக தகவல் தெரவிக்கிறது

முக்கியமான நிறுவனங்கள்

முக்கியமான நிறுவனங்கள்

இப்பட்டியலில் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் 15 நிறுவனங்களை தனியாக பட்டியலிட்டுள்ளது இச்சங்கம். அவை கிங்பிஷர் ஏர்லைன்ஸ், டெக்கான் குரோனிக்கல் ஹோல்டிங்ஸ், மோசர்பிரர் இந்தியா, ஆர்சிட் கெமிக்கல்ஸ், பேரமவுண்ட் ஏர்வேஸ், சைலாக் சிஸ்டம்ஸ், சுமிக்கஷா டிரேடிங், எடுகாம்ப், பாரதி ஷிப்யார்ட், பட்டிரானிக்ஸ் இந்தியா ஆகியவை ஆகும்.

மற்ற நிறுவனங்கள்
 

மற்ற நிறுவனங்கள்

வின்சம் டைமண்டு & ஜுவல்லரி கோ. (ரூ.2,660 கோடி), எலக்ட்ரோதெர்ம் இந்தியா (ரூ.2,211கோடி), ஜூம் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ.1,810 கோடி), ஸ்டெர்லிங் பயோ டெக் (ரூ.1,732 கோடி), எஸ் குமார்ஸ் நேஷன்வைட் (ரூ.1,692 கோடி), சூர்யா விநாயக் இண்டஸ்டிரிஸ் (ரூ.1,446 கோடி), கார்ப்பரேட் இஸ்பட் அலாய்ஸ் (ரூ.1,360 கோடி), பாரவேர் பிரிஷியஸ் ஜுவல்லரி & டைமண்டுஸ் (ரூ.1,254 கோடி), ஸ்டெர்லிங் ஆயில் ரிசோர்சஸ் (ரூ.1,197 கோடி) மற்றும் வரூன் இண்டஸ்டிரிஸ் (ரூ.1,129 கோடி).

மக்களின் உரிமை

மக்களின் உரிமை

இத்தகைய கடன் தொகை அனைத்தும் மக்களிடம் பெற்ற டெப்பாசிட் தொகையாகும், வங்கிகளிடம் கடன் பெற்ற நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மக்கள் கண்டிப்பாக அறிய வேண்டும். இது மக்களின் உரிமை. மேலும் இந்தியாவின் 24 வங்கிகளில் கடன் பெற்ற 406 நிறுவனங்களின் கடன் மதிப்பு 70,300 கோடியாகும்.

வங்கி வைப்பு தொகை

வங்கி வைப்பு தொகை

2014ஆம் ஆண்டு ஏப்ரல் 18ஆம் தேதி முடிவின் படி வங்கி வைப்பு தொகை 78,69,970 கோடி என அறிக்கை வெளியீடு கூட்டத்தில் கலந்து கொண்ட இச்சங்கத்தின் உயர் அதிகாரியான உடகி தெரவித்தார்.

வராக் கடன் மதிப்பு

வராக் கடன் மதிப்பு

2001 முதல் 2013ஆம் ஆண்டு காலத்தில் தனியார் வங்கி மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் வராக் கடனின் மதிப்பு 2.04 இலட்சம் கோடி என இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AIBEA releases list of bank loan defaulters

All India Bank Employees’ Association (AIBEA), on Tuesday, released the top 406 defaulters against whom banks have initiated legal actions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X