இனி 10 வயது குழந்தைகளும் வங்கி கணக்கை திறக்கலாம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய வங்கித் துறையில் ஒரு மைல்கல். 10 வயதிற்கும் மேற்பட்ட மைனர் குழந்தைகள் தற்போது வங்கிகளில் தனி சேமிப்பு கணக்கை துவங்க தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

இதனால் இனி வங்கிகளில் சின்ன சிறு வாண்டுகளின் கூட்டம் அலைமோதும், மேலும் இத்தகை சேமிப்பு கணக்குகளுக்கு அனைத்து விதமான சேவைகளும் வழங்கப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி செயல்பாடு

வங்கி செயல்பாடு

வங்கி செயல்பாட்டில் உள்ள சிக்கல்கள் மற்றும் அபாயங்களை கருத்தில் கொண்டே வயதும், வைப்பு தொகையில் அளவுகோல் நிலைநிறுத்தியே வங்கி கணக்குகளை திறக்க 10 வயதிற்கு மேற்பட்ட மைனர்களுக்கு அனுமதி அளித்தாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

இத்தகைய கணக்கிற்கு தேவையான ஆவணங்களை தத்தம் வங்கிகளே நிர்ணயம் செய்துகொள்ளவும் ரிசர்வ் வங்கி தெரிவித்ததுள்ளது.

இதர சேவைகள்

இதர சேவைகள்

இந்த கணக்கிற்கு வங்கி இண்டர்நெட் வங்கிச் சேவை, டெபிட் கார்டு, செக் புக், மற்றும் இதர சேவைகளும் வழங்க வங்கிகளுக்கு உரிமை உண்டு எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ஆனால் இந்த கணக்கிற்கான கார்டியன் அவர்களால் இந்த கணக்கில் எந்த விதிமான பரிவற்த்தனையும் செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்தது.

கையொப்பம்
 

கையொப்பம்

இந்த வங்கி கணக்கில் வைக்கப்படும் கையொப்பம் கடைசி வரை மாற்றாமல் வைத்திருக்க வேண்டும் எனவும் வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. (குழந்தைகள் 10 வயது முதல் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் பருவம், இப்பருவத்தில் அவர்களது கையொப்பம் மாறுவது இயல்பு, இதனால் வங்கி செயல்பாட்டில் பல பிரச்சனைகள் அவர் சந்திக்க நேரிடும்.)

க்யூ...

க்யூ...

இனி எல்லா ஏடிஎம் மற்றும் வங்கி க்யூவில் இந்த பிஞ்சு குழந்தைகளும் நிற்பார்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Now, children can open, operate savings accounts

In a bold move, the Reserve Bank of India, through a notification to banks, has said minors above the age of 10 may be allowed to open and operate savings bank accounts independently, if they so desire.
Story first published: Wednesday, May 7, 2014, 12:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X