உலகின் சக்திவாய்ந்த நிறுவனங்களில் ரிலையன்ஸ் முதல் இடம்!! ஃபோர்ப்ஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலகின் முன்னணி பத்திரிக்கை நிறுவனமான ஃபோர்ப்ஸ் உலகின் டாப் 2000 நிறுவனங்களை "குளோபல் 2000" என்ற தலைப்பில் வெளியிட்டது. இதில் டாப் முன்று இடங்களையும் சீன நிறுவனங்கள் கைப்பற்றியது மிகவும் முக்கியமான ஒன்றாக இப்பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் இப்பட்டியலில் இந்தியாவின் 54 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன, இதில் முகேஷ் அம்பானி தலைமைவகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் தான் முதல் இடத்தை பிடித்துள்ளது.

ஃபோர்ப்ஸ் நிறுவனம்

ஃபோர்ப்ஸ் நிறுவனம்

ஃபோர்ப்ஸ் நிறுவனம் இப்பட்டியலை நிறுவனங்களின் வருவாய், லாபம், சொத்துக்கள் மற்றும் சந்தை மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டே இப்பட்டியலை தயார் செய்துள்ளது.

டாப் 10 நிறுவனங்கள்

டாப் 10 நிறுவனங்கள்

டாப் 10 நிறுவனங்களில் முதல் முன்று இடத்தை பிடித்ததும் சீனா தான். அதிலும் 10இல் ஐந்து நிறுவனங்கள் சீன நிறுவனங்கள் என்பது குறிப்பிடதக்கது. சீனாவின் சிறப்பான் வளர்ச்சிக்கு இது ஒரு சான்றாகவே கருதப்படுகிறது.

டாப் 3 நிறுவனங்கள்

டாப் 3 நிறுவனங்கள்

மாநில அரசு பொருப்பில் இருக்கும் ஐசிபிசி என்னும் சீன வங்கி முதல் இடத்தை பிடத்தது, இதையடுத்து சீனா கன்ஸ்டிரக்ஷன் வங்கி மற்றும் அக்ரிகல்சர் பாங்க் ஆப் சீனா ஆகிய நிறுவனங்கள் இரண்டாம் மற்றும் முன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

பிற நாடுகள்

பிற நாடுகள்

இந்த 2000 நிறுவனங்களிள் 564 அமெரிக்க நிறுவனங்கள், 225 ஜப்பான் நாட்டு நிறுவனங்கள் மற்றும் மேலும் 54 இந்திய நிறுவனங்கல் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் ஆதிக்கம் இதிலும் தெரிகிறது.

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ்

இப்பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரிஸ் நிறுவனத்திற்கு கிடைத்த இடம் 135. 2014ஆம் ஆண்டின் தகவல் படி இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 50.9 பில்லியன் டாலர் மற்றும் விற்பனையின் மதிப்பு 72.8 பில்லியன் டாலர்.

இரண்டாம் இடம்

இரண்டாம் இடம்

ரிலையன்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா 155ஆம் இடத்தை பிடித்திருந்தது. இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு 23.69 பில்லியன் டாலர் ஆகும்.

இதர இந்திய நிறுவனங்கள்

இதர இந்திய நிறுவனங்கள்

இப்பட்டியலில் இடம் பெற்ற இதர இந்திய நிறுவனங்களையும் அவை பெற்ற இடங்களையும் பார்போம் எண்ணெய் மற்றும் எரிவாயு 176, ஐசிஐசிஐ வங்கி (304), டாடா மோட்டார்ஸ் (332), இந்தியன் ஆயில் (416), எச்டிஎஃப்சி வங்கி (422), கோல் இந்தியா (428), லார்சன் அண்டு டியூப்ரோ (500), டிசிஎஸ் (543), பார்தி ஏர்டெல் (625), ஆக்சிஸ் வங்கி (630), இன்போசிஸ் (727), பாங்க் ஆஃப் பரோடா (801), மஹிந்திரா அண்டு மஹிந்திரா (803), ஐடிசி (830), விப்ரோ (849), பிஎச்இஎல் (873), கெய்ல் இந்தியா (955), டாடா ஸ்டீல் (983), பவர் கிரிண்டு ஆஃப் இந்தியா (1011), இன்னும் சில.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India home to 54 of the world's largest company, Ambani's RIL leads: Forbes

Mukesh Ambani-led Reliance Industries leads the pack of 54 Indian companies in Forbes' annual list of the world’s 2000 largest and most powerful public companies, with Chinese companies occupying the top three slots on the list.
Story first published: Thursday, May 8, 2014, 16:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X