இந்தியாவின் 7வது விமான நிறுவனம் பறக்க தயார்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தீவிரமான விசாரனை மற்றும் ஆய்விற்கு பின்னர் மலேசியாவின் ஏர்ஏசியா மற்றும் டாடா சன்ஸ் குழுமத்தின் கூட்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் விமான சேவை வழங்க, விமான போக்குவரத்து கழகம் (DGCA) ஒப்புதல் அளித்தது.

 

மேலும் இந்த கூட்டணியின் அன்னிய முதலீட்டுக்கு எதிராக பிஜேபியின் சுப்பிரமணிய சுவாமி வழக்கு பதிவு செய்திருந்தது குறிப்பிடதக்கது.

ஏர்ஏசியா - டாடா சன்ஸ்

ஏர்ஏசியா - டாடா சன்ஸ்

இந்த கூட்டணி (AAIPL) இந்தியாவின் ஏழாவது விமான நிறுவனமாகும், இந்நிறுவனம் அடுத்த 3 மாத காலத்தில் தனது சேவையை துவங்கும். இந்நிறுவனத்தின் சீஇஓ மின்டு சந்தில்யா கூறுகையில் "இந்நிறுவனம் இந்தியாவில் மலிவு விலை விமான சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது, இதனால் தற்போது இருக்கு விமான கட்டணத்திற்கு 35 சதவீதம் குறைவாக கட்டணத்தையே விதிக்க திட்டமிட்டுள்ளோம்" என தெரிவித்தார்.

சென்னையில் துவக்கம்

சென்னையில் துவக்கம்

இந்த வெற்றிக் கூட்டணியின் முதல் விமான பயனம் நம்ம சென்னையில் இருந்து தான் துவங்க போகிறதாம். இப்போது இந்நிறுவனத்திடம் ஏர்பஸ் ஏ-320 ஒன்று உள்ளது, அடுத்து வரும் ஒவ்வொரு மாதமும் ஒரு விமானத்தை இணைக்கப்படும் என இந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்நிறுவனத்தின் விமானச் சேவை முன்று விமானங்களை கொண்டு துவங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்தியா
 

இந்தியா

மேலும் எங்கள் நிறுவனத்தின் சேவை மும்பை தவிற இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மும்பையில் சேவை துவங்கு முடிவை சில முக்கிய காராணங்களுக்காக ஒத்திவைத்துள்ளோம்.

வழக்கு

வழக்கு

ஏர்ஏசியா - டாடா சன்ஸ் கூட்டணியின் மீது உள்ள வழக்கின் உயர் நிதிமன்றத்தின் திர்ப்பை வைத்து நாங்கள் விமான போக்குவரத்துக்கு அனுமதி அளித்தோம், ஆனால் தற்போது அவ்வழக்கு உச்ச நிதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என பிரபாத் குமார் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata-AirAsia gets licence from DGCA

Indian flyers are soon going to be spoilt for choice and low fares may make a comeback. The Tata Sons' JV budget airline with Malaysia's AirAsia got the licence to fly from the directorate general of civil aviation (DGCA) on Wednesday. 
Story first published: Thursday, May 8, 2014, 13:05 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X