பிளிப்கார்டின் புதிய சேவை பிளிப்கார்ட் பர்ஸ்ட்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், வாடிக்கையாளர் உறுப்பினராகும் பிளிப்கார்ட் பர்ஸ்ட் (Flipkart First) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம், தன்னுடைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ள உள்ளது.

 

இந்த திட்டப்படி, இலவசமான ஷாப்பிங், இலவசமாக ஒரே நாளில் டெலிவரி செய்தல் மற்றும் சில சலுகைகளை அளிக்கப் போவதாக அந்நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பிளிப்கார்ட்

பிளிப்கார்ட்

இ-காமர்ஸ் சந்தையில் உள்ள போட்டிகளை சமாளிக்க கடந்த பிப்ரவரியிலிருந்து இந்நிறுவனம் சந்தைப்படுத்தும் வகையில் மாற்றம் செய்து வரத் துவங்கியுள்ளது. இந்நிறுவனம், 75,000 வாடிக்கையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஃப்ளிப்கார்ட் பர்ஸ்ட் சேவையை மூன்று மாதங்களுக்கு இலவசமாக வழங்க உள்ளது.

மக்களின் கவனம் தரத்தில்

மக்களின் கவனம் தரத்தில்

'இன்றைய இந்திய வாடிக்கையாளர் முதிர்ச்சியுடன் உள்ளனர், பொருளின் விலையை விட தரத்தையும் மற்றும் சேவையையும் அவர் கவனிப்பதால், வர்த்தகம் சூழ்நிலை அடுத்த கட்டத்திற்கு உந்தித் தள்ளப்பட்டுள்ளது', என்று இந்நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக இருக்கும் திரு.பின்னி பன்ஸால் தெரிவித்தார்.

18 மில்லியன் வாடிக்கையாளர்
 

18 மில்லியன் வாடிக்கையாளர்

பிளிப்கார்ட் நிறுவனத்தில் 18 மில்லியன் பயனாளிகள் பதிவு செய்து கொண்டிருப்பதாக குறிப்பிடும் ஃப்ளிப்கார்ட் நிறுவனம், அதன் போக்குவரத்து மற்றும் விநியோக சங்கிலியை மேம்படுத்தும் விதமாக குறிப்பிடத்தக்க அளவு முதலீடுகளை செய்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரிகளை வேகமாகச் செய்யவும், ஒரே நாள் மற்றும் அதே நாளில் டெலிவரி செய்யும் சேவைகள் போன்றவற்றை செய்து வருகிறது ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

இ-காமர்ஸ் சந்தை

இ-காமர்ஸ் சந்தை

CLSA என்ற தரகு நிறுவனத்தால் 3.1 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டிருக்கும் இந்தியாவின் மின்வணிக சந்தையில் போட்டியும் அதிகரித்து வருகிறது.

டாப் நிறுவனங்கள்

டாப் நிறுவனங்கள்

இரண்டு ஆண்டுகளின் முடிவில் நிறைய இ-காமர்ஸ் தளங்கள் மூடப்பட்டு விட்ட போதும், பிற நிறுவனங்களை பின்னுக்குத்தள்ளி விட்டு, முதல் நான்கு இடங்களில் ஃப்ளிப்கார்ட், ஸ்நாப்டீல்.காம், மைண்ட்ரா.காம் மற்றும் ஜாபோங்.காம் (Flipkart, Snapdeal.com, Myntra.com and Jabong.com) ஆகியவை இருந்து வருகின்றன. இந்த பட்டியலில் அமேசான் நிறுவனமும் இணைந்து கொண்டுள்ளது.

அமேசான்

அமேசான்

இந்திய சந்தைகளில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் அறிமுகம் ஆன அமேசான் ( Amazon Seller Services Pvt. Ltd) நிறுவனம், நாட்டிலேயே மிகப்பெரிய அளவில் இணைய வழியில் பல்வகைப் பொருள்களைத் (Product Assortments) தேர்ந்தெடுக்கும் முறையை ஏற்கனவே உருவாக்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart launches paid membership programme Flipkart First

Flipkart.com, India’s largest e-commerce firm, said it has launched a fee-based membership programme called Flipkart First, as the company steps up efforts to retain customers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X