டெல்லி: இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்களை முடிக்க இன்னும் 1 டிரில்லியன் டாலர் தேவைப்படுவதாக நிதித்துறை அறிக்கை தெரிவிக்கிறது. இதன் ஒரு பகுதியாக டெல்லி மெட்ரோ சேவை விரிவாக்கம் உள்ளிட்ட இந்தியாவின் 5 மிகப்பெரிய வளர்ச்சித் திட்டங்களுக்கு ஜப்பான் ரூ.15,000 கோடி கடனுதவி வழங்குகிறது. இதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.
இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் தக்கேஷி யாகி மற்றும் இந்தியப் பொருளாதாரத் துறை இணைச் செயலர் ராஜேஷ் குள்ளார் ஆகியோர் இதில் கையெழுத்திட்டனர்.
இந்திய-ஜப்பான்
இந்திய-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதற்காகவும் இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை மேம்படுத்தும் நோக்கிலும் இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் தூதரகம் அறிவித்துள்ளது.
மன்மோகன் சிங்
கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் ஜப்பானிய பிரதமர் ஷின்ஸோ அபே சந்திப்பின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. (உலகித்தில் பெருமாலான எல்லா நாடுகளிடமும் நட்புறவு வைத்துகொள்ளவது(கடன் பெற்றுள்ளது) இந்தியா தான். )
டெல்லி மெட்ரோ ரயில்
இதில், டெல்லி மெட்ரோ ரயில் சேவை விரிவாக்கத்திற்காக மட்டும் ரூ.8,933 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை காற்றாலை மற்றும் சூரிய சக்தி வளர்ச்சித் திட்டங்களுக்காகவும், ஹரியானாவின் விநியோக அபிவிருத்தித் திட்டத்துக்காகவும் பயன்படுத்தப்படும்.
கடனுதவி
ஒரே ஒப்பந்தத்தில் இத்தகைய அதிகமான தொகை கடனுதவி அளிப்பது ஜப்பான் நிதித்துறை வரலாற்றில் இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. ( இவனுங்க பிளான் பெருச போடுரானுங்களே..)


Click it and Unblock the Notifications