மும்பை: மும்பை பங்கு சந்தையில் தொடர்ந்து இரண்டாவது வாரமாக இன்றும் பங்கு சந்தை உயர்வுடன் துவங்கியது. வாரத்தின் முதல் நாளான இன்று சென்செக்ஸ் 300 புள்ளிகள் உயர்ந்து 23,293.46 புள்ளிகளை எட்டியுள்ளது, மும்பை பங்கு சந்தை வரலாற்றில் இது ஒரு மைல்கள் என்று சொன்னால் மிகையாகாது.
கடந்த 5 வாரங்களாக நடந்த தேர்தல் பிரச்சாரம், வாக்கு பதிவுகளையொட்டி இந்நியாவின் வர்த்தக சந்தை மிகவும் உற்சாகத்துடன் செயல்பட்டது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் வெற்றி மிகவும் பிரகசமாக உள்ளதால் முதலீட்டு சந்தையில் அதிகப்படியான முதலீட்டை பெற்று வருகிறது.
ஏன் இந்த திடீர் உயர்வு
இத்தகைய உயர்விற்கு முக்கிய காரணம் நாடாளுமன்ற தேர்தலும், பாரத ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான திரு. நரேந்திர மோடியும் தான். மோடி குஜராத்தில் செய்த சிறப்பு மிக்க வளர்ச்சி இந்திய மக்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது, இதனால் இந்தியாவில் இத்தகைய வளர்ச்சி பெற மோடி சரியான தேர்வு என்பதை உணர்ந்துள்ளனர் இந்திய மக்கள். இதனால் இவரின் வெற்றி வாய்ப்பு மிகவும் பிரகாசமாக உள்ளது.
கருப்பு பணமும், நாடாளுமன்ற தேர்தலும்
சென்செக்ஸ்
தற்போதய நிலவரப்படி சென்செக்ஸ் 344 புள்ளிகள் உயர்ந்து ஆதவாது கடந்த வர்த்தக சந்தையின் முடிவில் இருந்து 1.50 சதவீதம் உயர்ந்து 23,339.13 புள்ளிகள் எட்டியது, இதற்கு முன் சென்செக்ஸ் 23,048.49 புள்ளிகள் எட்டியதே அதிகப்படியான சாதனையாக இருந்தது அதுவும் கடந்த வெள்ளிக்கிழமை தான்.
நிப்ஃடி
அதேபோல் நிப்ஃடியும் சிறப்பான வளர்ச்சியை அடைந்தது. கடந்த வர்த்தக சந்தை முடிவிலிருந்து இன்று 1.55 சதவிதம் உயர்ந்து 6,965.25 புள்ளிகளை எட்டியது. இதற்கு முன் 6,871.35 புள்ளிகளே சாதனை அளவாக இருந்தது.
லாபகரமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் அதிகபடியான லாபத்தை அடைந்த டாப் 5 நிறுவனங்களில் ஐஆர்பி இன்பரா, ஏபிபி இந்தியா, ஜெய்பிராகஷ் அசோசியேட்ஸ், அசோக் லெய்லான்டு, டோரன்டு பவர் அகிய நிறுவனங்கள் அதிகப்படியான லாபத்தை அடைந்தது. அதிலும் ஐஆர்பி இன்பரா 16 சதவீத உயர்வை எட்டியது.
நஷ்டத்தை சந்தித்த நிறுவனங்கள்
இத்தகைய சிறப்பான சூழ்நிலையிலும் சில முக்கிய நிறுவனங்களும் சரிவை தழுவியுள்ளது கார்ப்ரேஷன் வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், மேக்ஸ் இந்தியா, மாரிகோ, பஜாஜ் பின்சர்வ், இன்னும் பல நிறுவனங்கள் இப்பட்டியலில் அடங்கும்.
அன்னிய முதலீடு
கடந்த வெள்ளிக்கிழமை மட்டும் இந்திய சந்தையில் 12.69 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications