லண்டன்: பிரிட்டன் நாட்டு பணக்காரர்கள் பட்டியலில் பல காலமாக லக்ஷ்மி மிட்டல் முன்னிலையில் இருந்து வந்தார், இப்போது இவரை முன்றாவது இடத்திற்கு தள்ளி ஹிந்துஜா சகோதரர்கள் முதல் இடத்தை பிடித்துள்ளனர். பிரிட்டன் நாட்டில் மொத்தம் 102 பில்லியனர்கள் உள்ளனர் இதில் 6 பேர் இந்திய வம்சாவழியை சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடதக்கது.
லண்டனை சேர்ந்த ஸ்ரீசந் மற்றும் கோபிசந் ஹிந்துஜா அவர்களின் சொத்து மதிப்பு கடந்த வருடம் 1.3 பில்லியன் பவுண்டு மட்டுமே இருந்தது, சிறப்பான வியாபாரம் மற்றும் தொழில் முன்னேற்றத்தின் காரணமாக இவவருடம் இவர்களின் சொத்து மதிப்பு 11.9 பில்லியன் பவுண்டாக உயர்ந்துள்ளது.
முதல் இடம்
ஹிந்துஜா சகோதரர்களின் சொத்து மதிப்பு 11.9 பில்லியன் டாலராக உயர்ந்து முதல் இடத்திற்கு சென்றுள்ளதால், கடந்த வருடம் முதல் இடத்தில் இருந்த ரஷ்ய வர்ததகரான அலிஷ்ர் உஸ்மனாவ் மற்றும் இரணடாம் இடத்தில் இருந்த லக்ஷ்மி மிட்டல் ஆகியோர் இரண்டாம் இடத்திற்கும், முன்றாம் இடத்திற்கும் சறுக்கியதாக சன்டே டைம்ஸ் ரிச் லிஸ்ட்டு வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
ஹிந்துஜா சகோதரர்கள்
இவர்கள் பல நாட்டு நிறுவனங்களிடம் சேர்ந்து ஆட்டோமோட்டிவ், ரியல் எஸ்டேட், மற்றும் எண்ணெய் ஆகியவற்றில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த வருடம் இப்பட்டியலில் முன்றாம் இடத்தில் இருந்தது குறிப்பிடதக்கது. (ஒரே வருடத்தில் இத்தகைய அதீத வளர்ச்சியா?? தப்பா இருக்கே..)
இந்தியர்களின் ஆதிக்கம்
லண்டனின் 72 பில்லியனர்களில் பல இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர், இதில் லக்ஷ்மி மிட்டல், பிராக்ஷ் கோகியா, பவல், அனில் அகர்வால் மற்றும் அஜய் கால்சி ஆகியோர் இடம்பெற்றுள்ளதாக சண்டே டைம்ஸ் தெரிவித்துள்ளது.
லக்ஷ்மி மிட்டல்
லக்ஷ்மி மிட்டல் இரும்பு உற்பத்தி, விற்பனையில் ஈடுப்பட்டுள்ளார். இவரது வர்த்தக வணிகம் லண்டன் மட்டும் அல்லாமல் இந்தியா, அமெரிக்கா, கனடா மற்றும் பிற உலக நாடுகளில் செயல் பட்டு வருகிறது. இவரின் சொத்து மதிப்பு 10.25 பில்லியன் டாலர்.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

ஸ்டாலினை விட விஜய்க்கு தான் போட்டி அதிகம்!! பரபரக்கும் தமிழக சட்டமன்ற தேர்தல் களம்!!



Click it and Unblock the Notifications