2015ம் ஆண்டில் 22,000 பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் சேர்ப்போம்!! இன்போசிஸ்

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இந்தியாவின் முண்ணனி சாப்ட்வேர் நிறுவனங்களில் நாராயண மூர்த்தி தலைமை வகிக்கும் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த 2 வருடங்களாக சந்தித்து வரும் பிரச்சனைகளை நேற்று நம் குட்ரிட்டனஸ் செய்தி பதிவில் பார்த்தோம்.

 

இத்தகைய நிலையில், நிறுவனத்தின் பணியாளர்கள் அதிகளவில் வெளியேறுவதால் இன்போசிஸ் நிறுவனம் கல்லூரி கேம்பஸ் இண்டர்வியூவின் மூலம் 22,000 பணியாளர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக இந்நிறுவனத்தின் நிர்வாக குழு உறுப்பினரான யு.பி. பிரவின் தெரிவித்தார்.

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு

இத்தகைய கேம்பஸ் இண்டர்வியூவின் மூலம் கடந்த ஆண்டு ஆட்களை சேர்த்ததை விட இந்த ஆண்டு அதிகளவில் சேர்க்கப்படுவதாக இந்நிறுவனத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்தானர்.

பணியாளர்கள்

பணியாளர்கள்

இந்நிறுவனத்தில் 2012ஆம் ஆண்டில் கல்லூரியில் இருந்து வெளிவரும் புதிய மாணவர்களில் ஒருவரைக்கூட இன்போசிஸ் நிறுவனம் சேர்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. மேலும் 2013ஆம் நிதியாண்டில் தோராயமாக 10,000 புதிய மாணவர்களை சேர்த்து குறிப்பிடதக்கது.

ஐ.ஐ.டி, என்.ஐ.டி

ஐ.ஐ.டி, என்.ஐ.டி

சில வருடங்களுக்கு முன்பு இந்நிறுவனத்தின் சேர மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பார்ப்பு இருந்தது, ஆனால் தற்போது மிகவும் குறைந்துள்ளதாக தகவல் தெரவிக்கிறது. ஐஐடி, என்ஐடி மாணவர்கள் ஒருவர் கூட இன்போசிஸ் நிறுவனத்தில் சேர ஆசைபடுவதில்லை என்பது குறிப்பிடதக்கது.

ஊதிய உயர்வு
 

ஊதிய உயர்வு

மேலும் இந்நிறுவனத்தில் ஊதியம் மற்றும் ஊதிய உயர்வு மிகவும் குறைவாக உள்ளது, இதன் காரணமாக இந்நிறுவனத்தில் பணிபுரியும் பொரும்பாலான பணியாளர்கள் நிறுவனத்தை விட்டு வெகு விரைவில் வெளியேறுகின்றனர்.

வேலை

வேலை

இத்தகைய நிறுவனங்கள் சாப்ட்வேர் இன்ஜினியர் என்று பணியில் அமர்த்திவிட்டு, பீபிஒ துறையில் வேலை பார்க்க வைத்ததும், பெஞ்சில் உட்காரவைத்து பின்பு பணியில் இருந்து துறத்துவதும் உண்டு, இதனாலேயே பல ஊழியர்கள் நிறுவனத்தில் சேர்ந்து ஓரிரு வருடங்களிலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys plans to recruit 22,000 freshers in FY'15

Infosys, India's second-largest software services provider, will hire as many as 22,000 college graduates through campus hiring in the current fiscal year, higher than last year's fresher hiring level.
Story first published: Wednesday, May 14, 2014, 11:50 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X