மும்பை: இந்தியாவில் விமான நிறுவனங்கள் பயணக் கட்டணங்களை அதிரடியாக குறைக்கும் வேலையில் பயணிகளுக்கு மேலும் ஒரு நற்செய்தி. மலேசிய விமான போக்குவரத்து நிறுவனமான ஏர்ஏசியா, டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில மலிவு விலை விமான சேவை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஏர்ஏசியா - டாடா நிறுவனம் விமான சேவையில் இறங்கியதால் இந்திய விமான நிறுவனங்களுக்கிடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்போட்டியை சமாளிக்க, மேலும் ஒரு சுற்று விமான கட்டணங்களை குறைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் உலகில் மிகவும் குறைவான கட்டணத்தில் விமான சேவை வழங்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும் என தெரிகிறது.
ஸ்பைஸ்ஜெட்
இந்தியா விமான சேவையில் அதிரடி விலை குறைப்பை துவங்கிய சன் குழுமத்தின் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தான். கடந்த ஆண்டு 3 முறை விலை குறைப்பு செய்த இந்நிறுவனம். இந்த ஆண்டு 7 முறை விலை குறைப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடதக்கது.
ஏர்ஏசியா - டாடா
நீண்ட கால போராட்டத்திற்கு பிறகு இக்கூட்டணி நிறுவனத்திற்கு இந்தியாவில் விமான சேவை வழங்க மத்திய அரசின் ஒப்புதல் கடந்த வாரம் கிடைத்தது. இந்நிறுவனத்தின் சிஇஓ-வான மிதுன் சந்தில்யா கூறுகையில் "இந்தியாவில் விமான சேவை கட்டணங்கள் குறைந்து வருவதை நான் கவனித்து வருகிறேன், மேலும் இத்துறையில் போட்டியை அதிகரிக்க நாங்கள் தற்போது இருக்கு மார்கெட் விலையை விட 35% சதவீதம் குறைவான கட்டணத்தையே வழங்க உள்ளோம்" என தெரிவித்தார்
வாடிக்கையாளர்
இத்தகைய மலிவான கட்டணம் இந்தியாவில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை பெற உதவும் என தெரிவித்தார். மேலும் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளருக்கு மேலும் சில சலுகைகள் வழங்க முடிவு செய்துள்ளோம் என மிதுன் தெரிவித்தார்.
டிக்கெட் புக்கிங் தளங்கள்
இந்த அதிரடி விலை குறைப்பால் யாத்ரா.காம் மற்றும் கிளியர்டிரிப் தளங்களில் அதிகப்படியான வாடிக்கையாளர்களை டிக்கெட் பதிவு செய்து வருவதாக இந்நிறுவனங்களின் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் முன்பதிவில் 35 சதவீதத்தில் இருந்து 70 சதவீத உயர்வை அடைந்துள்ளோம்.
1 ரூபா அரிசி... 1 ரூபா விமான டிக்கெட்
தாத்தா வழியை பின்தொடர்ந்த கலாநிதிமாறன் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு செல்ல 1 ருபாய்க்கு டிக்கெட் சேவையை அறிவித்தார். இதனால் பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் பங்குகள் 50 சதவீதம் உயர்வை கண்டது. பின்பு திட்டத்தை விமான இயக்குநரகம் நிறுத்துமாறு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு உத்தவிட்டது.
உட்டாலக்கடி வேலை
ஆயிரம் ஆஃப்ர்கள் கொடுத்தாலும் மொத்தமாக கூட்டி கழித்தால், சாதாரண டிக்கெட்டின் விலைக்கு 10 முதல் 15 சதவீதம் வரை மட்டுமே தள்ளுபடி கிடைக்கும். இந்த வகையில் இந்தியாவின் முக்கிய வழிதடங்களுக்கு 1 ரூபாய் திட்டம் போல் 1,999 ரூபாய்,1,899 ரூபாய் மற்றும் 25 சதவீத தள்ளுபடி திட்டம் என திட்டங்களை அறிவித்தது ஸ்பைஸ்ஜெட்.
ஏர்ஏசியா
ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு கடுமையான போட்டி கொடுக்க ஏர்ஏசியா இறங்கியுள்ளது. ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம்ன்னு சொல்வாங்க அதுபோல இவங்க போடில நம் காசு செலவு மீச்சம் ஆனா சரிதாங்க...


Click it and Unblock the Notifications