ரூ.100 கோடி முதலீடு பெற்ற டெண்டுல்கர் "ஸ்மாஷ்"!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான எஃப்.டபள்யூ (FW) ஸ்போர்ட்ஸ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட் நிறுவனம், கிரிக்கெட் நட்சத்திரமான டெண்டுல்கர் மற்றும் ஸ்ரீபால் மொராகியா ஆகியோரின் ஸ்மாஷ் என்டர்டெயின்மெண்ட் (Smaaash Entertainment Pvt Ltd) நிறுவனத்தின் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளது.

 

இந்த ஸ்மாஷ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தில் முதல் முறையாக நடைபெறும் தனியார் துறை பங்குகள் முதலீட்டின் முதல் சுற்று இது என்பது குறிப்பிடதக்கது.

ரூ.100 கோடி முதலீடு

ரூ.100 கோடி முதலீடு

இந்த முதலீடு தொடர்பான விபரங்களை எஃப்.டபள்யூ ஸ்போர்ட்ஸ் மற்றும் ஸ்மாஷ் என்டர்டெயிண்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே வெளியிடாவிட்டாலும், இந்த வர்த்தகத்தில் நெருக்கமாக பங்கெடுத்துக் கொண்டிருந்த ஒருவர் இதன் மதிப்பு ரூ.100 கோடிகள் என தெரிவித்திருக்கிறார்.

பங்கு இருப்பு

பங்கு இருப்பு

டெண்டுல்கர் மற்றும் மொராகியா இருவரும் சேர்ந்து வளர்ச்சிக்கான மூலதனத்தை உயர்த்தும் பொருட்டு தனது பங்குகளை இருப்புக்களை குறைத்துள்ளனர்.

மூலதனம்

மூலதனம்

ஸ்மாஷ் நிறுவனம் தற்போது மொத்தமாக ரூ.150 கோடிகளை மூலதனமாக கொண்டுள்ளது, மேலும் இந்நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்காக இந்த மூலதனம் பயன்படுத்தப்படும் என இந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஸ்மாஷ் நிறுவனம்
 

ஸ்மாஷ் நிறுவனம்

இந்நிறுவனம் தற்போது 70,000 சதுர அடி பரப்பளவுக்கும் மேலாக பரந்து விரிந்திருக்கிறது, ஸ்மாஷ் ஒரு சிறந்த பொழுதுபோக்கு அமைவிடமாகும். விளையாட்டின் மீது ஆர்வமுள்ள யாவரையும் ஈர்க்கச் செய்யும் சிமுலேட்டர்களை கொண்டிருக்கும் இந்த இடத்தில், மிகவும் திறன்மிக்க எதிராளிகளிடம் நேரடியாக மோதி விளையாடக் கூடிய வகையிலான வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதன் மூலம் வீரர்களது திறமைகளை பரிசோதிக்க முடியும்.

சிமுலேட்டர்

சிமுலேட்டர்

இந்நிறுவனத்தில் கிரிக்கெட் சிமுலேட்டர், F1 பந்தய சிமுலேட்டர், கால்பந்து சிமுலேட்டர், சிக்ஸ்-லேன் டுவிலைட் பௌலிங் மையம், பெயிண்ட்-பால் உள்விளையாட்டகம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த ஸ்போர்ட்ஸ் பார் மற்றும் உணவு விடுதி ஆகிய வசதிகளை கொண்டுள்ளது ஸ்மாஷ்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tendulkar's SMAAASH hits a sixer with private equity

FW Sports Investment Fund LP, a Mauritius-based private equity fund, has acquired a significant minority stake for about Rs 100 crore in Mumbai-based Smaaash Entertainment Pvt Ltd, which is promoted by cricket icon Sachin Tendulkar.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X