சென்னை: இந்தியாவின் 16வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவரும் இன்றைய நாளில் அதிகப்படியான அன்னிய முதலீட்டின் காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 11 மாத உயர்வை எட்டியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 59.46 ரூபாயாக இருந்தது. ஆனால் இன்று ரூபாயின் மதிப்பு சிற்ப்பான நிலையை எட்டியுள்ளது. இன்றைய நாணயச் சந்தையில் வர்த்தகம் துவக்கம் முதலே டாலரின் மதிப்பு தொடர்ந்து சிரிய துவங்கியது இதனால் ரூபாயின் மதிப்பு ரூ.58.69 ஆக உயர்ந்துள்ளது.
டாலர் மதிப்பு
கடந்த ஒரு வருடத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு தாறுமாறாக சரிவை கண்டது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக 2013ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.42 ஆக சிரிந்தது. மேலும் கடந்த 10 முதல் 12 வருடங்களில் இத்தகைய சரிவை இந்திய ரூபாய் சந்தித்ததில்லை.
காங்கிரஸ்
இந்தியாவில் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி தனது கடைசி 3 வருட ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளியது.
பணவீக்கம்
இந்திய பொருளாதாரத்தை சீர்குழைத்த பணவீக்கம், நாட்டின் முக்கிய துறைகளான உணவு, வங்கி, நாணய சந்தை, வர்த்தக ஆகிய துறைகளை கடுமையாக பாதித்துள்ளது. உதாரணமாக வெங்காய விலை 90 ரூபாய்க்கு அதிகமாக விற்கப்பட்டது.
ரகுராம் ராஜன்
ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சுப்பாராவ் பணிகாலம் முடிந்த பிறகு ரகுராம் ராஜன் கவர்னராக நியமிக்கப்பட்டர். இவர் பதவியேற்க்கும் நாளில் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் இருக்கிறது என நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது வாழ்த்து உரையில் தெரிவித்தது நினைவிருக்கும். அவரின் சிறப்பான செயல் திட்டங்கள் காரணமாகவும் நிதியமைச்சகத்தின் ஒத்துழைப்பாலும் நாட்டின் பொருளாதாரம் தற்போது நிலையற்ற தன்மையில் இருந்து நிலையான நிலைக்கு உந்தப்பட்டுள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications