மும்பை: இன்று இந்தியாவின் அடுத்த 5 ஆண்டு கால வளர்ச்சியை நிர்ணயம் செய்யும் மிக முக்கியமான நாள். இந்தியாவில் 9 கட்டங்களாக நடந்த தேர்தல் முடிவு இன்று வெளிவர உள்ள நிலையில் இந்த மும்பை பங்கு சந்தையில் காலை வர்த்தகம் துவக்கம் முதல் சுமார் 1000 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது.
மும்பை பங்கு சந்தையில் இது வரலாறு காணாத உயர்வு, இதுவரை இத்தகை நிகழ்வு நிகழ்ந்தில்லை. மேலும் தற்போதைய வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சி 285 இடங்களில் முன்னிலையில் உள்ளது. அதேபோல் தமிழக வாக்கு எண்ணிக்கையில் அதிகமுக 30 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் மும்பை பங்கு சந்தையில் அதிரடியான வளர்ச்சியை கண்டது. இதனால் சென்செக்ஸ் 1074.42 புள்ளிகள் உயர்ந்து 25,020.43 புள்ளிகளை எட்டியது.
நிஃப்டி
சென்செக்ஸ் போல நாங்களும் சலைத்தவர்கள் இல்லை என்று நிஃப்டியும் 355.60 புள்ளிகள் உயர்ந்து 7,478.75 எட்டியது.
தேர்தல் ஆரவாரம்
இந்தியாவின் இந்த 14வது நாடாளுமன்ற தேர்தல் இந்திய மக்கள் மட்டும் இன்றி உலக நாடுகளும் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. குறிப்பாக பாக்கிஸ்தான், அமெரிக்க, அரபு நாடுகள் அகியவை. மேலும் இந்திய பொருளாதாரத்திற்கு கடும் போட்டி கொடுக்கும் சீனா இந்தியாவின் ஆட்சிமாற்றத்தை சற்று கடுப்புடனே பார்க்கிறது.
அன்னிய முதலீடு
மேலும் கடந்த 54 நாட்களில் இந்திய பங்கு சந்தையிலும், கடன் சந்தையிலும் சுமார் 1.56 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பல முக்கிய நிறுவனங்களில் மிகவும் சாதுரியமாக செயல்பட்டு தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றியுள்ளது.
வரி மோசடி
இத்தகைய பணச் சலவையால் இந்தியாவிற்கு பல ஆயிரம் கோடி வரி வருமான இலப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications