மும்பை: இந்திய வங்கித்துறையில் 2014ஆம் ஆண்டின் மே 2ஆம் தேதி ரிசரவ் வங்தியின் தகவல் அறிக்கையின் படி வைப்பு நிதி 14.8 சதவீதம் உயர்ந்து 7,888,416 கோடியாக உள்ளது. இக்காலகட்டத்தில் கடன் விகித உயர்வை விட வைப்பு நிதியின் வளர்ச்சி அதிகம் என்பது குறிப்படதக்கது.
இந்தியாவில் நரேந்திர மோடி தலைமையிலான பாரத ஜனதா கட்சி நடந்து முடிந்த 16 வது நாடாளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடங்களில் வெற்றி வாகை சூடி ஆட்சியை பிடிக்கவுள்ளது. மோடி தலைமையிலான அரசு வங்கி வட்டி விகதங்களில் சாககமான முடிவுகளை கொண்டுவரும் என்ற கணிப்பில் மக்கள் வங்கி வைப்பு நிதிகள் அதிகரித்துள்ளது.
கடன் விகிதம்
இதேகாலகட்டத்தில் கடந்த வருடம் வங்கிகளில் செய்த வைப்பு தொகை ரூ. 6,868,811 கோடி மட்டுமே என ரிசர்வ் வங்கி தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. அதேபோல் கடன் அளிப்பு விகிதம் 13.8 சதவீதம் உயர்ந்து ரூ.53,29,812 கோடியில் இருந்து ரூ.60,67,459 கோடியாக உயர்ந்துள்ளது.
மோடி
மேலும் புதிய ஆட்சி மாற்றம் செய்த பிறகு வட்டி வகிதத்தில் கண்டிப்பாக மாற்றம் இருக்கும் என தகவல் கிடைத்துள்ளது. இதனால் வங்கி வைப்பு நிதிக்கு குறைந்தது 50 அடைப்படை புள்ளிகள் உயர்வு கிடைக்கும் எனவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
வைப்பு நிதிகள்
இதனால் அடுத்த 6 மாத காலத்திற்கு இந்திய வங்கித்துறையில் வைப்பு நிதியின் சதவீதம் உயர்ந்து கொண்டே தான் இருக்கும்.
வரி விலக்கு
மேலும் சில முக்கியமான முதலீட்டு திட்டங்களுக்கு வரி விலக்கும் எதிர்ப்பார்ப்பதாக வங்கித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications