குழந்தைகளுக்கு நிதியியல் கல்வியை எப்படி கற்பிப்பது??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய குழந்தைகள் அடம் பிடித்து பல பொருட்களை வாங்க தெரிந்துக் கொண்டனர். இப்பழக்கம் 15 வயதிற்கும் மேற்பட்ட குழந்தைகளிடத்திலும் அதிகமாக பார்க்க முடிகிறது. இப்பழக்கத்தை மாற்ற என்ன செய்வது என்று தெரியாமல் பெற்றோர்களும் குழம்பியுள்ளனர். இதற்கு சரியான யோசனை அவர்களுக்கு பணத்தை எப்படி உருவாக்குவது என்று சொல்லிக் கொடுத்தால் போதும்.

 

வங்கி வைப்பு நிதிகளில் அதிக லாபம் பெறுவது எப்படி?? ரொம்ப சிம்பிள்.. வங்கி வைப்பு நிதிகளில் அதிக லாபம் பெறுவது எப்படி?? ரொம்ப சிம்பிள்..

பொதுவாக ஒரு பொருளின் அருமையை உணராத குழந்தை அதை தான்தோன்றித் தனமான உபயோகப்படுத்தும். ஆனால் இந்த பொருட்களின் முக்கியத்தை உணர்ந்தால் அப்பொருளை பெரியவர்களை விட பத்திரமாக பாதுகாத்துக்கொள்ளும் திறன் குழந்தைகளிடம் உண்டு.

பால பாடங்கள்

பால பாடங்கள்

உங்களுடைய குழந்தைகளுக்கு பணம் பற்றிய பால பாடங்களை கற்றுக் கொடுத்த பின்னர், அவர்கள் பாராட்டும் விதமாக பரிசுகளை அளியுங்கள்.

முதலீடு

முதலீடு

கடன் பற்றிய விபரங்களை உங்களுடைய டீன்-ஏஜ் குழந்தைகள் தெரிந்து கொண்ட பின்னர், அதன் மறுபக்கமான முதலீடு செய்வது பற்றி சொல்லத் தொடங்குங்கள். அதிலும், கடன்களை கொடுத்து, தவணையை நீட்டி, வட்டியை சேகரிக்கும் போது சொல்லத் தொடங்குங்கள்.

முதலீட்ட பத்திரங்கள்
 

முதலீட்ட பத்திரங்கள்

இந்த நிலையிலிருந்து, அவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கான முதலீடுகளான சேமிப்பு பத்திரங்கள் மற்றும் வைப்பு நிதி சான்றிதழ்கள் போன்ற எளிய விஷயங்களை அறிமுகம் செய்து வையுங்கள். நிதிநிலையின் தற்போதைய சரிவு நிலைகளால், இவற்றிற்கு கிடைக்கக் கூடிய இலாபங்கள் குறைவாகவே இருந்தாலும், குழந்தைகளிடம் நம்பிக்கையை உருவாக்கும் முக்கியமான முதலீட்டு பாடத்தை இந்த வழிமுறைகள் கற்றுக் கொடுக்கும்.

பங்குச் சந்தை

பங்குச் சந்தை

பின்னர், அவர்களுக்கு பங்குச் சந்தையை அறிமுகம் செய்து வையுங்கள், ஆனால் பங்குகளை வாங்குவதற்கு முன்னோட்டாக இதைச் செய்யத் தேவையில்லை. மாறாக, அவர்களை சில பன்முகப்படுத்தப்பட்ட பரஸ்பர நிதிகள் அல்லது நிலையான அட்டவணை நிதிகளை வாங்குமாறு அறிவுரை கொடுக்கலாம்.

இண்டர்நெட் விளையாட்டு

இண்டர்நெட் விளையாட்டு

இந்த வகையில் பங்குகளை முதலீடு செய்யும் விளையாட்டுகள் சில இணையங்களில் உள்ளன. இவை விளையாட்டாகவும் மற்றும் டீன்-ஏஜ் பருவத்தினர் பங்குகளைப் பற்றி அறிந்து கொள்ள உதவும் கல்வி உதவி சாதனங்களாகவும் இருக்கின்றன.

பங்குசந்தை கணக்கு

பங்குசந்தை கணக்கு

பங்குச் சந்தையின் நெளிவு சுளிவுகளை உங்களுடைய குழந்தை தெரிந்து கொண்ட பின்னர், நம்பிக்கையான விஷயங்களை அவர்களிடம் எதிர்பார்க்கும் அளவிற்கு நீங்கள் செயல்பட்டிருக்கிறீர்கள் என்று பொருளாகும். பின்னர், தனியான பங்குகளில் சிறிதளவு பணத்தை முதலீடு செய்ய விரும்பினால், டிஸ்கவுண்ட் புரோக்கருடன், ஒரு டிரஸ்ட் கணக்கை உருவாக்கவும்.

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

18 வயதுக்கு குறைவான மைனர்களால், சொந்தமாக வர்த்தகம் செய்ய முடியாதென்பதால், அவர்களுக்காக நீங்கள் அதை செய்யலாம். எனினும், இதற்கான பாஸ்வேர்டை கொடுத்து விட வேண்டாம். இதன் மூலம், எந்த வகையான வர்த்தகத்தில் ஈடுபட்டாலும், குழந்தை உங்களுடைய ஆலோசனையை முன்னதாக பெற வேண்டியிருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Investment education for teens

After teaching your children the hard money lessons, show them the rewards of financial self-control. Once your teenagers get a grip on credit, introduce them to the flip side: investing. After all, that's when they extend the credit and collect the interest.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X