ஆஸ்திரேலிய நிறுவனத்தை கைப்பற்றிய டாடா!!
கொல்கத்தா: டாடா குழுமத்தின் டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனத்தின் பிரட்டன் கிளை நிறுவனத்தின் மூலம் ஆஸ்திரேலியவின் பிரான்ஸ்கி லெவன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகளை முற்றிலும் கைப்பற்றியுள்ளது.

பிரான்ஸ்கி லெவன் நிறுவனம் மேப் என்னும் பிரண்டில் காபி கொட்டைகளை வறுத்தல், அறைத்தல் மற்றும் விற்பனையில் செயல்பட்டு வருவதாக டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இத்தகைய முதலீட்டின் மூலம் ஆஸ்திரேலியாவில் பானங்கள் பிரிவில் சிறப்பாக செயல்பட முடியும், மேலும் நிறுவனத்தின் கிளைகளை உலக நாடுகளில் விரிவடைய உதவியாக இருக்கும் என டாடா குளோபல் பெவரேஜஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் இரு நிறுவனங்களும் இந்த ஒப்பந்தத்தின் மதிப்பை வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications