சென்னை: நாள் முழுவதும் அரும்பாடுபட்டு சம்பாதித்த பணத்தை, பாதுகாப்பாக முதலீடு செய்வே அனைவரும் விரும்புவோம். இந்த வகையில் பாதுகாப்பான முதலீட்டு திட்டம் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது, வங்கி வைப்பு நிதிகள் தான், இது உண்மையும் கூட. வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் இருக்கும் வைப்பு நிதிகளில் நிச்சயமான வட்டி வருமானம், பாதுகாப்பு என பல்வேறு அம்சங்கள் உடையது.
கந்து வட்டிக்கு பணத்தை விட்டால் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று நீங்கள் சொல்வதும் உண்மையே, ஆனால் இதில் இருக்கும் ரிஸ்க் மிக அதிகம், மேலும் நம் பணத்திற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை. இதனால் பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தை தேர்ந்நதெடுத்து அமைதியான வாழ்க்கையை வாழ விரும்பும் பெருவாரியான மக்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் வைப்பு நிதிகளுக்கு அதிகமான வட்டி வருமான தரும் சில வங்கிகளை இப்போது பார்போம்.
மேலும் இவை அனைத்து வயதினருக்கும் பொருத்தமானது, மூத்த குடிமக்களுக்கானது அல்ல.
கர்நாடகா வங்கி
இவ்வங்கியில் 1 வருடம் முதல் 2 வருடம் வரை முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9.50 சதவீத வட்டி அளிக்கப்படுகிறது. மேலும் இவ்வங்கி வைப்பு நிதிகளுக்கு பாதுகாப்பு சற்றும் குறைவில்லை.
சவுத் இந்தியன் வங்கி
400 நாட்கள் மட்டுமே முதர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 9.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. மேலும் இவ்வங்கியில் வைப்பு நிதிகளுக்கான வட்டி வருமானத்தை ஒவ்வொரு காலாண்டிலும் முதலீட்டு தொகையுடன் சேர்க்கப்படுகிறது. இது உண்மையிலே மிகவும் லாபகரமான திட்டம்.
டிசிபி வங்கி
டிசிபி என்று அழைக்கப்படும் டெவலப்மென்ட் கிரேடிட் பாங்கில் அளிக்கப்படும் வைப்பு நிதிகளுக்கு 9.4 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது. இத்திட்டத்திற்கு 13 மாதம் முதல் 24 மாதம் வரை முதிர்வு காலம் உடையது.
மஹிந்திரா பைனான்ஸ்
இந்தியாவில் வங்கி சேவையை துவங்க ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பம் அளித்த நிதிநிறுவனங்களில் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனமும் ஒன்று, ஆனால் இந்நிறுவனம் வங்கி உரிமம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது. இந்நிறுவனம் வங்கி இல்லை என்றாலும் பாதுகாப்பான நிதியியல் நிறுவனங்களில் மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் வைப்பு நிதிக்கு 10 சதவீத வட்டி அளிக்கிறது, ஆனால் முதிர்வு காலம் 36 மாதம் என்பது சற்று அதிகமே.
ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ்
36 மாதம் முதிர்வு காலம் கொண்ட இந்நிறுவனத்தின் வைப்பு நிதிகளுக்கு 11.94 சதவீதம் வட்டி அளிக்கிறது, கிட்டதட்ட 1 ரூபாய் வட்டி. இந்தியாவில் இருக்கும் நிதிநிறுவனங்களில் ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் பைனான்ஸ் நிறுவனம் தான் அதிகளவில் வட்டி அளிக்கிறது என்பது குறிப்பிடதக்கது. மஹிந்திரா பைனான்ஸ் நிறுவனத்தை போன்றே இதுவும் வங்கியல்ல.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications