பெங்களூரு: இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரங்களில் பெங்களூரும் ஒன்று. பெங்களூரை சுற்றி சாப்ட்வேர் மற்றும் தொழிற்துறை நிறுவனங்கள் அமைந்துள்ளதால் கர்நாடக அரசு இந்நகரின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் அவுட்டர் ரிங் ரோடு அமைத்துள்ளது இதனால் மக்கள் எந்த ஒரு முளையில் இருந்தும் மற்றொரு முனைக்கு எளிதில் செல்ல முடியும்.
அது முதலாகவே, பெங்களூரு நகரின் சில பகுதிகள் அவற்றின் கட்டுமான வசதிகள், ஷாப்பிங் மால்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களால் ஆடம்பரமான நகரப்பகுதிகளாக மாறி வருகின்றன. பெங்களூருக்கு மற்றொரு பெயர் கார்டன் சிட்டி என்பதை நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் பல ஆயிரம் கோடிகள் புழங்கும் இந்த இடத்தில், பெங்களூரின் சில பகுதிகள் மிகவும் ஆடம்பரமான பகுதிகளாக மாறி வருகிறது. இதற்கு ஏற்ப பெங்களூரு நகரத்தின் மில்லியனர் வாடிக்கையாளர்கள் தனிமையான, தங்களுக்கேற்ற வகையிலான, ஹெலிபேட் மற்றும் தொழில்முறை சேவை மற்றும் பராமரிப்பு போன்ற நவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட இடங்களையே ரியல் எஸ்டேட் செய்பவர்களிடம் விரும்பி கேட்கின்றனர்.
இந்த வகையில் பெங்களூரு நகரில் ஆடம்பர முலாம் பூசிக் கொண்டு வளர்ந்து வரும் சில இடங்களைப் பற்றி இங்கு காண்போம்.
எம்.ஜி ரோடு
பெங்களூரு நகரின் மிகவும் சுறுசுறுப்பான இந்த சாலையின் ஒரு பக்கத்தில் கடைகள், அலுவலக கட்டிடங்கள், உணவகங்கள், தியேட்டர்கள் மற்றும் உணவு விடுதிகள் என பல வசதிகள் உள்ளன. டிரினிட்டி சர்க்கிளில் தொடங்கி அனில் கும்ளே சர்க்கிள் வரை நீண்டிருக்கும் எம்.ஜி சாலையில் உலகத் தரம் வாயந்த கட்டுமான வசதிகளும், கட்டிடங்களும் மற்றும் மெட்ரோ இரயில் நிலையமும் உள்ளன.
சதாசிவ நகர்
வடக்கிலுள்ள மேக்ரி சர்க்கிளிலிருந்து தெற்கின் பாஷயம் சர்க்கிள் வரை நீண்டு செல்லும் சதாசிவ நகர் பகுதி, பெங்களூரின் பழமையான ஆடம்பர பகுதிகளில் ஒன்றாகும். இங்கே குடியேறியுள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் பழைமையான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், பெங்களூர் நகரத்தின் பாரம்பரியம் மற்றும் மரபை காக்க நினைப்பவர்களாகவும் உள்ளனர். திரைப்பட நட்சத்திரங்கள், அரசியல்வாதிகள், தொழில்முனைவர்கள், தொழில் பிரபலங்கள் என பலரும் வசிக்கும் மிக ஆடம்பரமான பகுதியாக இந்த இடம் விளங்குகிறது. அதே சமயத்தில் மிகவும் பாதுகாப்பான பகுதியாகவும் சதாசிவ நகர் உள்ளது.
இந்திரா நகர்
இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரு நகரின் சிறிய ஆடம்பரப் பகுதியாக இந்திரா நகர் உள்ளது. மேற்கில் உல்சூர், தெற்கில் டோம்லுர், வடக்கில் பையப்பனஹள்ளி மற்றும் கிழக்கில் விமானபுரா ஆகிய இடங்களைக் கொண்டுள்ளது இந்திரா நகர். மிகப்பெரிய பிராண்ட் ஷோரூம்கள், பப்கள், கஃபே மற்றும் நட்சத்திர உணவகங்கள், கல்வி நிலையங்கள் ஆகியவை இப்பகுதியை சூழ்ந்துள்ளது.
கோரமங்களா
பெங்களூரு நகரத்தின் தென்-கிழக்கு பகுதியில் உள்ள கோரமங்களா, பெங்களூருவாசிகள் வாழ்வதற்கு, மிகவும் அதிகமான விலை கொடுத்து வாங்கத் தயாராக உள்ள பகுதியில் ஒன்று. ஷாப்பிங் சென்டர்கள், மால்கள் மற்றும் உணவகங்கள் ஆகியவற்றால் வணிகமயமாக்கப்பட்டுள்ள இந்த பகுதியின் போக்குவரத்து மற்றும் மக்கள் தொகை ஆகியவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications