வேதனை, சோதனைகளை தாண்டினால் சாதனை!!

சென்னை: உலகில் ஒவ்வொரு உழைக்கும் மக்களுக்கு இருக்கும் ஆசை முதலாளியாக வேண்டும் என்பது தான். ஒரு சிறு தொழிலை தொடங்கி அதை வெற்றிகரமாக நடத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். அதில் லாபம் குறைவாக தான் இருக்கும், அதனால் நம் வாழ்க்கை பெரிதாக மாறிவிடாது, அதேபோல் நஷ்டம் வந்தால் நம் வாழ்கையை புரட்டிப்போட்டு விடும்.

அதேபோல் ஒரு சிறிய, ஐடியா தொடங்கி அதை வெற்றிகரமான ஒரு தொழிலாக மாற்றுவதற்கு நிறைய உழைக்க வேண்டியிருக்கும். ஆனால் ஒருமுறை க்ளிக் ஆகிவிட்டால் போதும், அப்புறம் எல்லாம் ஏறும் இடம்மெல்லாம் ஏறுமுகம் தான்.

இதற்கு சூப்பரான உதாரணம் பேஸ்புக். உண்மையாகவே பேஸ்புக் தளத்தை உருவாக்கும் போது உலகம் முழுவதும் இப்படி பரவும் என நினைத்திருக்க மாட்டார் ஜூக்கர்பெர்க். இந்நிலையை அடைய அவர் அனுபவித்த கஷ்டங்கள் பல.

சிறு தொழிலதிபர்கள் கடந்து செல்லும் 5 முக்கிய தருணங்கள் இதோ... இதை கடந்தால் நீங்களும் ஒரு ஹூரோ தான்..

உங்கள் ஐடியாவே உங்களுக்கு ஒத்து வராது

உங்கள் ஐடியாவே உங்களுக்கு ஒத்து வராது

தொழில் தொடங்கும் முன் ஒரு பெரும் ஐடியாவோடு களத்தில் இறங்குவீர்கள். ஆனால் அதை செயல்படுத்தும் போதுதான் அதில் எவ்வளவு வில்லங்கங்கள் இருக்கிறது என்று தெரிய வரும். கடைசியில் அதைத் தூக்கிக் கடாச வேண்டிய நிலை வரலாம். ஒருசில சமயம் உங்கள் ஐடியா ஒர்க் அவுட் ஆகவில்லை என்றால் அது அவ்ளோதான் என்று நினைத்துவிடக் கூடாது.

நிராகரிக்கப்படுவீர்கள்

நிராகரிக்கப்படுவீர்கள்

நீங்கள் ஆரம்பித்த தொழிலில் கஷ்ட-நஷ்டம் இயல்பானது. அதுபோல் நிராகரிப்பு என்பதையும் எதிர்கொள்ளத்தான் வேண்டும். கஷ்டப்பட்டு நீங்கள் சிந்தித்து உருவாக்கிய ஐடியாக்களை ஒரு நொடியில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் ஒட்டுமொத்தமாக நிராகரித்து விடுவார்கள். இந்த விஷயத்தில் திடமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.

வெற்றி நிச்சயம்

வெற்றி நிச்சயம்

தொழில் என்று ஒன்றை ஆரம்பித்தால் அதில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். வெற்றி எப்போது வரும் என்பதைக் கணிக்கவே முடியாது. ஆனால் தோல்வி உங்கள் முதுகில் ஏறி உக்கார்ந்து கொள்ளும். உறுதியோடு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் என்று உணர வேண்டும்.

உங்களை நீங்கள் அறிவீர்கள்

உங்களை நீங்கள் அறிவீர்கள்

சொந்தமாக ஒரு தொழிலைத் தொடங்கும் போதுதான் உங்களைப் பற்றி பாஸிட்டிவ், நெகட்டிவ்களை நீங்களே உணர்ந்து கொள்ள முடியும். பலவீனத்தைத் தூக்கி எறிந்துவிடுங்கள். அதை எப்படி சமாளித்து மீண்டு வந்தீர்கள் என்பதையும் அடிக்கடி அசைபோட்டுக் கொண்டால், உங்களை மேலும் உயர்த்திக் கொள்ள முடியும்.

உங்கள் பொறுப்பை உணர்வீர்கள்

உங்கள் பொறுப்பை உணர்வீர்கள்

ஒரு தொழிலை ஆரம்பித்து நடத்தி வருகிறீர்கள். அதில் உள்ள 'ஏ டூ இசட்' உங்களுக்குத் தெரிய வேண்டும். அனைத்தும் தெரிந்திருந்தாலும் உங்களுக்கென்று சில பொறுப்புகள் உள்ளன. அவற்றுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுங்கள். வெற்றி நடை போடுங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+