வங்கி ஏடிஎம் சேவையில் ஓர் புதுமை!! ப்ரெய்லி கீபேட்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய ஏடிஎம் சேவையில் ஒரு புரட்சி, பார்வையற்றவர்களும் ஏடிஎம் இயந்திரத்தை பயன்படுத்தும் வகையில் ப்ரெய்லி கீபேட் மற்றும் பேசும் ஏடிஎம்களை அமைக்க ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளையும் அறிவுறுத்தியுள்ளது. இதன் பணிகளை விரைவில் துவங்குவதாகவும் வங்கிகள் பதில் அளித்துள்ளது.

 

மும்பையில் ஒர் புதிய முயற்சி!! ஏடிஎம் இயந்திரத்தில் குடிநீர் விநியோகம்..

வெளிநாடுகளில் பார்வையற்றவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும் பல வகையான வசதிகளை செய் தருகிறது, இதனால் அவர்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தங்களது வாழ்க்கை சிறப்பாக வாழ்கின்றனர். ஆனால் இந்தியாவில் சில முக்கியமான இடங்களை தவிர வேறு எந்த இடங்களிலும் இத்தகைய வசதிகள் அவர்களுக்கு கிடைப்பதில்லை. இதனால் அவர்களது வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது. உண்மையில் இது ஒரு நல்ல துவக்கம்.

முன்றில் ஒரு பங்கு

முன்றில் ஒரு பங்கு

அனைத்து வங்கிகளும் ப்ரெய்லி கீபேட் மற்றும் பேசும் ஏடிஎம்களை அமைக்கும் படி ரிசர்வ் வங்கி சில வருடங்களுக்கு முன்பே அறிவுறுத்தியது, ஆனால் சில வங்கிகள் தங்களது ஏடிஎம் மெஷின்களில் முன்றில் ஒரு பங்கு ஏடிஎம்களில் கூட இத்தகைய சேவை அளிக்கவில்லை என்று ரிசர்வ் வங்கிக்கு புகார் வந்துள்ளது. (அரசு நல்ல திட்டங்களை அறிவிப்பதே சில சமையம் தான், அதையும் இவர்கள் செய்ய விட்டால் நாடு எப்பதான்டா முன்னேறும்!!)

ஜூலை 1

ஜூலை 1

இப்புகாரை அடுத்து ஜூலை 1 முதல் பொருத்தப்படும் அனைத்து ஏடிஎம்களிலும் ப்ரெய்லி கீபேட் மற்றும் பேசும் ஏடிஎம்களாக இருக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும் அடுத்த சில மாதங்களுக்குள் பார்வையற்றவர்களுக்கு பயன்படும் வகையில் ப்ரெய்லி கீபேட் மற்றும் பேசும் ஏடிஎம்களை, அனைத்து பழைய மற்றும் புதிய ஏடிஎம்களில் பொருத்துமாறு கேட்டுகொண்டுள்ளது.

ப்ரெய்லி கீபேட்
 

ப்ரெய்லி கீபேட்

ப்ரெய்லி கீபேட் என்பது பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், பரித்தியேகமாக தயாரிக்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் மிகவும் சுலபமாக பயன்படுத்த முடியும், மேலும் பேசும் ஏடிஎம் வசதியை கொண்டு தெளிவான வழிக்காட்டுதலின் மூலம் அவர்கள் பாதுகாப்பான முறையில் ஏடிஎம் பரிவர்த்தனையை செய்ய முடியும்.

வீல் சேர்

வீல் சேர்

மேலும் ஊனமுற்றவர்கள் வீல் சேரில் ஏடிஎம் நுழைவிற்குள் செல்ல வசதியாக சருக்கு மேடையை அமைக்கும் பணியை துவங்கவும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.

பூதக் கண்ணாடி

பூதக் கண்ணாடி

இதுமட்டும் அல்லாமல் பார்வை குறைபாடு உடையவர்கள் தெளிவாக ஏடிஎம் திரையை பார்க்க பூதக் கண்ணாடியை அமைக்கவும் ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

ஏ.டி.எம் கொலை, கொள்ளைகளில் இருந்து தப்புவது எப்படி!!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All new ATMs must be disabled-friendly: RBI

The Reserve Bank of India (RBI), for the benefit of persons with disabilities, has made it mandatory for banks to install talking ATMs with Braille keypads.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X