பெங்களூரு: அமேசான் நிறுவனத்துடன் கடுமையாக போட்டி போடும் பிளிப்கார்ட் நிறுவனம், இந்திய ஆன்லைன் சில்லறை வர்த்தக சந்தையில், ஆடை விற்பனையில் கொடிகட்டி பறக்கும் மிந்திரா நிறுவனத்தை 300 மில்லியன் டாலருக்கு கைபற்றியதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் சில்லறை வர்த்தக நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
இந்த வெற்றி கலைப்பில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த டார்கெட் அலிபாபா தான் என பின்னி தெரிவித்தார். அது என்ன அலிபாபா??
அலிபாபா
அலிபாபா என்பது ஒரு நிறுவனத்தின் பெயர். சில்லறை வர்த்தகத்தில் உலகளவில் வெற்றிக்கொடியை நாட்டிய நிறுவனம் அலிபாபா. இந்நிறுவனம் சீனாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது.
சச்சின் மற்றும் பின்னி பன்சால்
2008ஆம் ஆண்டு அமேசான் நிறுவனத்தில் உயரிய பதவியில் இருந்து விலகி இந்தியாவிற்கு வந்த இரண்டு இளைஞர்களின் வெற்றி கதையே இந்த பிளிப்கார்ட். 2008ஆம் ஆண்டு இந்தியாவில் அமேசான் நிறுவனத்தை போன்று இந்தியாவில் ஒரு நிறுவனத்தை துவங்கள நினைத்த இவர்கள் தற்போது அமேசான் நிறுவனத்திற்கு போட்டியாக உள்ளனர்.
அமேசான்
மிந்திரா நிறுவனத்தை கைபற்றிய சச்சின் மற்றும் பின்னி பன்சால் கூறிகையில்,"அமேசான் நிறுவனத்தை போன்று வளர்வது எங்களது கனவு, தற்போது நாங்கள் இந்தியாவில் அமேசான் நிறுவனத்தை விட பெரிய நிறுவனமாக வளர்ந்துள்ளோம். எங்களது அடுத்த டார்கெட் அலிபாபா நிறுவனத்தை போன்று உலகநாடுகளிலும் எங்களது கிளைகளை பறப்புவது தான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.
சீன பயனம்
நாங்கள் சீனாவிற்கு வர்த்தக சார்ந்த பணிகளுக்காக பல முறை சென்றுள்ளோம். மக்கள், வருமானம், எண்ணங்கள் அனைத்திலும் இந்தியாவை ஒத்த நாடு சீனா, அலிபாபா போன்ற நிறுவனங்கள் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு செல்கின்ற போது. பிளிப்கார்டும் உலக நாடுகளுக்கு விரைவில் பறக்கும் என சச்சின் பன்சால் தெரிவித்தார்.
பல நிறுவனங்கள்
மேலும் நாங்கள் பேக்-எண்ட், ஆட்டோமேஷன் மற்றும் சப்ளை செயின் துறைகளை சார்ந்த நிறுவனங்களை கையகபடுத்த முடிவு செய்துள்ளோம். இதனால் பிளிப்கார்ட் நிறுவனம் மேலும் சிறப்பாக வளர எதுவாக இருக்கும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications