மின்பற்றாக்குறையை குறைக்க புதிய திட்டங்களை தீட்டுகிறார் மோடி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியாவில் நிலவும் மின் பற்றாக்குறையை மிக விரைவில் குறைக்க முக்கிய இலக்காக கொண்டு செயல்பட உள்ளது. மேலும் இம்முயற்சியில் அரசு சோலார் பவர் மற்றும் காற்றாலையை சிற்ப்பாக பயன்படுத்தி அதிகளவில் மின்சாரத்தை குறைந்த செலவில் உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது.

 

தற்போது நரேந்திர மோடியை, மின் சத்தியின் அருமையை உணர்ந்த முதல் இந்திய பிரதமர் என்று பத்திரிக்கைகள் வர்ணிக்கப்படுகிறார்.

மின் சக்தி

மின் சக்தி

மேலும் இவர் செய்ய திட்டமிட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கும், சுற்றுசூழலுக்கும் எந்த வீதமான பாதிப்பும் அடையாத சோலார் பவர் மற்றும் காற்றாலைகளை அதிகம் சார்ந்து இருப்பவை என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் மலிவு விலையில் மின்சாரம் இந்திய மக்களுக்கு கிடைக்கும்.

இந்தியா முழுவதும் விநியோகம்

இந்தியா முழுவதும் விநியோகம்

இதில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் இருக்கும் ஒவ்வொரு விட்டிற்கும் கிடைக்கும் வகையில் கிரின்டு மூலம் இணைக்கப்பட்டும் எனவும் தெரிவித்தார். மேலும் உபரி மின்சாரம் மட்டுமே வெளிநாடுகளுக்கு விற்கப்படும் எனவும் தெளிவாக்க தெரிவித்துள்ளர்.

40 கோடி மக்கள்
 

40 கோடி மக்கள்

தற்போது இந்தியாவில் 40 கோடி மக்கள் மின் பற்றாக்குறையில் வாழ்கின்றனர் என்று ஒரு தகவல் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த 40 கோடி மக்கள் என்பது மொத்த அமெரிக்கா மற்றும் கனடா நாட்டின் மக்கள் தொகை.

கடல் பகுதிகள்

கடல் பகுதிகள்

மேலும் அயல்நாடுகளிலும் இந்தியாவிலும் கடல் சார்ந்த பகுதிகளில் அதிகப்படியான காற்றாலைகளை அமைக்க இந்த அரசு முடிவு செய்துள்ளது. மேலும் அதிகப்படியான காற்று இருந்தால் இத்திட்டத்திற்கு ஏற்றது அல்ல, அதனால் 12 மையில் வேகம் அடிக்கும் காற்று பகுதியை கண்டறிந்து காற்றாலைகளை அமைத்தால் இந்தியாவில் மின்பற்றாக்குறை விரைவில் தீர்க்க முடியும் என புதிய அரசு அறிவித்துள்ளது. (மிகவும் சிறப்பாக விடிவமைக்கப்பட்ட திட்டம்)

தனியார் மற்றும் அரசு முதலீடு

தனியார் மற்றும் அரசு முதலீடு

இத்தகைய திட்டங்களில் அரசின் பங்கு அதிகம் இருந்தாலும் தனியார் நிறுவனங்களின் பங்கும் இருக்கும் எனவும் இந்த அரசு தெரிவித்துள்ளது. (ஒரு திட்டம் முழுமையாக அரசு பொருப்பில் இருந்தால், காலப்போக்கில் இத்திட்டதின் வலிமை குறைந்துவிடும். தனியார் துறையின் உள்ளீடு இருந்தால் அரசு சிறப்பான சேவையை பெறலாம்)

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wind, solar energy to get big push under Modi-led NDA

The Narendra Modi government is likely to harness solar power and give a fillip to development of offshore wind energy so as to provide electricity to every household in the near future, industry officials said today.
Story first published: Friday, May 23, 2014, 15:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X