நிதி நெருக்கடியில் ஏர் இந்தியா!! பணம் கொடுத்தால் தான் "கடைய" வைக்க முடியும்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: கடும் நிர்வாக நெருக்கடிகளை சந்தித்து வரும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மும்பை விமான நிலைய நிர்வாகம் இனி ஒவ்வொரு முறையும் பணம் கட்டி சேவைகளைப் பெறும் கேஷ் அண்ட் கேரி முறையில் மட்டுமே செயலாற்ற முடியும் என அறிவித்துள்ளது.

 

ஏர் இந்தியாவின் நிலுவைத் தொகைகள் 450 கோடி ரூபாயை எட்டியுள்ளதால் இந்நிறுவனம் இத்தகைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மும்பை நகரின் விமான நிலையத்தை நடத்திவரும் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் இந்த அறிவிப்பை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளது.

காலக் கெடு

காலக் கெடு

காலக் கெடுவுக்குள் நிலுவைகளை செலுத்தத் தவறியதால், பணம் கொடுத்துச் சேவையைப் பெறும் முறைக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

200 கோடி

200 கோடி

"இதுவரை ஏர் இந்தியாவின் நிலுவைத் தொகைகள் 450 கோடியை எட்டியுள்ளது" என்று தெரிவிக்கும் செய்திகள், இந்த பணம் கொடுத்துச் சேவை பெறவேண்டிய நிலையிலிருந்து சாதாரண நிலைக்கு மாற, உடனடியாக 200 கோடி ரூபாய் செலுத்தவேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றன.

ஸ்டார் அல்லையன்ஸ்

ஸ்டார் அல்லையன்ஸ்

ஏர் இந்தியா ஸ்டார் அல்லையன்ஸ் எனப்படும் சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பில் இடம்பெற உள்ள நிலையில், மும்பை விமான நிலைய நிர்வாகம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது இந்நிறுவனத்திற்கு மிகவும் வருத்தத்தை அளித்துள்ளது.

சமளிப்பு
 

சமளிப்பு

அதே வேளையில், ஜிஎம்ஆர் குழுமத்தால் நடத்தப்படும் டெல்லி சர்வதேச விமான நிலைய நிறுவனத்தில் இது போன்ற நடவடிக்கைகள் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை எனவும், நிலுவைகள் இருப்பினும் இந்த அரசு விமான நிறுவனம் தொடர்ந்து தற்போதைய செலவுகளுக்கான கட்டணங்களைச் செலுத்தி வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

ம்ம்ம்ம்...என்னத்த கொடுத்து...என்னத்த இது தேறப்போகுதோ!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Dues mounted to Rs 450 crore, Air India put on cash-and-carry mode?

Mumbai Airport authorities have put Air India on a cash-and-carry mode after its dues mounted to Rs 450 crore, sources said today. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X