காங்கிரஸ் உதறிய நல்ல திட்டங்களை நரேந்திர மோடி நிறைவேற்றுவாரா??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய இரயில்வே மற்றும் இகாமர்ஸ் துறையில் நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிப்பதற்கான முன்மொழிவுகளுடன் தயாராகி வருகிறது வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம். அண்மையில், வெளிநாட்டு முதலீடடாளர்கள் பாதுகாப்பு உற்பத்தி தளத்தில் நுழையச் செய்யும் வகையில் விதிகளை தளர்த்தினாலும், அதில் எந்தவித பங்களிப்புகளும் பெற்வில்லை என்பது குறிப்பிடதக்கது.

 

தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டு துறை (Department of industrial policy and promotion) அமைச்சரவையின் குறிப்புகளுடன் இந்த திட்டத்தை நிறைவேற்ற தயாராக உள்ளது என்றும் ஆனால் புதிய அரசாங்கத்திடமிருந்து எந்த அளவிற்கு நேரடி அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என்ற குறிப்பு வருவதாற்காக காத்துக்கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சிறந்த துறைகள்

சிறந்த துறைகள்

இந்திய இரயில்வே துறை மட்டும் இகாமர்ஸ் துறையில் இத்தகைய அன்னிய முதலீடு இத்துறைகளை பல பரிமாற்றங்களில் வளர எதுவாக இருக்கும். மேலும் இந்தியாவில் இத்துறைகள் வேகமாக வளர்ந்து வருவது உண்மை. புதிய அரசின் அனுமதி கிடைத்த உடன் இதற்கான பணிகள் துவங்கும் என நிதித்துறை அதிகாரிகள் தெரவித்துள்ளனர்.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

பங்குகளின் நிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த, முக்கியமான அமைச்சகங்களின் செயலர்களை திரு.நரேந்திர மோடி சந்திக்கும் போது, இந்த விஷயம் அவருக்கு முன்னதாக வைக்கப்படும். சில்லறை வர்த்தகத்தைப் பொறுத்த வரையில் பாரதீய ஜனதா கட்சி தொடர்ந்து எதிர்த்து வருவது முக்கியமான ஒன்று.

100% அன்னிய முதலீடு
 

100% அன்னிய முதலீடு

இந்திய இரயில்வே துறையை பொறுத்தவரை, அதிவேக இரயில் அமைப்புகள், புறநகர் இரயில் சேவைகள் அதிவேக இரயில் பாதைகள் மற்றும் துறைமுகங்கள் மற்றும் சுரங்கங்களுடன் இணைக்கப்படும் சரக்கு இரயில் பாதைகள் போன்றவற்றில் 100% அளவிற்கு நேரடி அன்னிய முதலீடுகளை அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

காங்கிரஸ்

காங்கிரஸ்

ஆனால், காங்கிரஸ் தலைமையிலான அரசு வழக்கும் போல் நல்ல திட்டங்களை ஒத்திவைக்கும் விதிமாக இத்திட்டங்களையும் ஒத்திவைத்து. இப்பரிந்துறைக்கு மோடி தலைமையிலாண அரசவது நல்ல முடிவை கொண்டு வருமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

பாதுகாப்பு உற்பத்தி துறை

பாதுகாப்பு உற்பத்தி துறை

இந்திய பாதுகாப்பு உற்பத்தி துறையில் 26% வரையில் அன்னிய முதலீடு தளர்த்தபட்டுள்ள போதிலும், இத்துறையில் சட்டதிட்டங்கள் தெளிவான வரையறை இல்லாத போதும் பாதுகாப்பு அமைச்சகம் நிறைய அதிகாரங்களைப் பெறும் நிலை உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt readies plan for FDI in railways and e-commerce

The commerce and industry ministry is ready with proposals to allow foreign direct investment in railways and e-commerce, while easing the rules for overseas investors to enter the defence production space, which has seen zero participation despite the recent opening up.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X