சென்னை: விரைவில் கோடீஸ்வரனாக யாரிடம் நிதியியல் கல்வியை கற்க வேண்டும்?? வேற யாரு எல்லம் நம்ம அமைச்சர்களிடம் இருந்துதான். என்ன நான் சொல்வது சரிதானே. இதை நான் சொல்லவில்லை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கழகம் (Association for Democratic Reforms) என்ற அமைப்பு சில முக்கிய புள்ளிவிரங்களுடன் தெரிவிக்கிறது.
நடந்து முடிந்த 16வது நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற அமைச்சர்களின் சொத்து மதிப்பு கடந்த 5 வருடங்களில் 7 கோடிக்கும் அதிகமாகியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இவையணைத்தும் அமைச்சர்கள் தேர்தல் ஆணையத்திற்கு அளித்த (பொய்யான) தகவலின் படி ஆராயப்பட்டதாகும்.
வளர்ச்சி
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது இவர்கள் அளித்த சொத்து மதிப்ப அறிகையும், தற்போது அளித்துள்ள அறிக்கையையும் ஒப்பிட்டும் பார்க்கும் போது 5 வருடங்களில் இவர்களின் சொத்து மதிப்பு சுமார் 137 சதவீதம் வளர்ந்துள்ளது. அதாவது வருடத்திற்கு 27 சதவீத வளர்ச்சி.
மக்கள்
சாமானிய மக்கள் செய்யும் முதலீட்டுக்கும் இத்தகைய வளர்ச்சி கிடைக்கும் என்றால் நம்பமுடியாத ஒன்று, ஆனால் மக்கள் வரிப்பணத்தில் வாழும் இவர்கள் இத்தகைய வருமானம் பெருகிறார்கள் என்றால் ஆச்சரியமாக உள்ளது. இத்தகைய நிலைக்கு யார் காரணம்?? வேற யாரு நீங்களும் நானும் தான் இத்தகையவர்களை கோட்டையில் கொண்டு நிறுத்தியுள்ளோம்.
165 அமைச்சர்கள்
மேலும் இந்த அமைப்பு 2009ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டில் வெற்றிபெற்ற 165 அமைச்சர்கள், தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்த சொத்து விபரங்களை ஆய்வு செய்ததில் இத்தகை தகவல் கிடைத்துள்ளதாக இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
யார் இந்த அமைச்சர்கள்
தெலுங்கான ராஷ்டிரிய சமிதி கட்சியின் தலைவர் கே. சந்திரசேகர ராவ் 2009ஆம் ஆண்டில் 2 கோடி உள்ளதாக அறிக்கையை சமர்ப்பித்தார், ஆனால் இப்போது 15 கோடி மதிப்பிலான சொத்துகளை கணக்கில் காட்டியுள்ளார், (கணக்கில் மட்டும்!!) சுமார் 569 சதவீத வளர்ச்சி.
டாப் 10
மேலும் இப்பட்டியலில் டாப் 10 இடங்களை பிடித்த கண்ணியமான அமைச்சர்களை பார்போமா சத்துர்கா சிங்கா (பி.ஜே.பி), பினாக்கி மிஸ்ரா (பி.ஜே.டி), சுப்பிரியா சூலே (என்.சி.பி), ஆர்.சி.பாட்டில் (பி.ஜே.பி), ஹெச்.எஸ்.பந்தல் (எஸ்.எ.டி), ஆர்.எஸ்.ராவ் (டீ.டி.பி), பி.சி மோகன் (பி.ஜே.பி), டி.கே. சுரேஷ் (ஐ.என்.சி), ஜி.முன்டே (பி.ஜே.பி), வருண் காந்தி (பி.ஜே.பி).


Click it and Unblock the Notifications