இந்தியாவின் புதிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மோடி தலைமையிலான அரசு டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் நேற்று மாலை 5 மணியளவில் உலகின் பல்வேறு தலைவர்கள் முன்னிலையில் நரேந்திர மோடி பரதமர் பதவியேற்றார். இதை தொடர்ந்து அமைச்சரவைக்கான 24 அமைச்சர்களும், 21 இணை அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

 

இதில் நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சராக அருண் ஜேட்லி பதவியேற்றார். மேலும் இவர் மோடியின் வலது கை என போற்றப்படுபவர். இப்பதவியை அருண் ஜேட்லி ஏறக்கும் பொருட்டு இவருக்கு நாட்டின் பொருளாதாரத்தை முற்றிலும் மாற்றியமைக்கும் பொறுப்பு இவருக்கு உண்டு. இந்திய பொருளாதாரத்தையும், பாதுகாப்பை அமைப்பையும் வலுப்படுத்த மோடி இத்துறையை அருண் ஜேட்லியிடம் கொடுத்திருக்கிறார்.

மேலும் இப்போது பதவியேற்றுள்ள அமைச்சர்கள் அனைவரும் நாட்டை சிறந்த முறையில் மாற்றியமைக்க தகுதியானவர்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இப்போது இந்தியாவின் நிதி மற்றும் வருவாய் துறை அமைச்சராக போகும் அருண் ஜேட்லி அவர்களை பற்றி முழுமையாக பார்போம்.

பதவியில் அருண் ஜேட்லி

பதவியில் அருண் ஜேட்லி

நிதி மற்றும் வருவாய் துறை அமைச்சரான அருண் ஜேட்லி இதற்கு முன் வர்த்தக மற்றும் தொழில் துறை, சட்டம் மற்றும் நீதித் துறைகளில் இணை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

லோக்சபா தேர்தல் 2014

லோக்சபா தேர்தல் 2014

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அருண் ஜேட்லி, பாஜக சார்பில் அமிர்தசரஸ் பகுதியில் நின்றார். ஆனால் அவர் காங்கிரஸ் கட்சியின் கேப்டன் அமிர்ந்தர் சிங்கிடம் தோற்றார்.

கல்வி

கல்வி

டெல்லி செயின்ட் சேவியர் பள்ளியில், பள்ளிக் கல்வியை முடித்தார், பின்பு டெல்லி ஸ்ரீராம் கல்லுரியில் காமர்ஸ் பட்டபடிப்பை முடித்தார். அதன் பின் டெல்லி பல்கலைகழகத்தில் சட்ட படிப்பை முடித்தார். இவர் பள்ளி மற்றும் கல்லுரியில் சிறந்த மாணவராக இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

குடும்பம்
 

குடும்பம்

அருண் ஜேட்லி 1982ஆம் ஆண்டில் சங்கிதாவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ரோஹன் மற்றும் சோனாலி ஆகிய இரு பிள்ளைகள் உள்ளனர்.

இண்டர்நெட்டில் அருண் ஜேட்லி

இண்டர்நெட்டில் அருண் ஜேட்லி

இப்போது இருக்கும் அனைத்து அமைச்சர்களும் இண்டர்நெட்டில் கலக்கி வருகின்றனர். இதில் இவர் மட்டும் என்ன விதிவிளக்கா. இவரது வலைபக்கத்திற்கு செல்ல இதை கிளிக் செய்யவும், அதேபோல் இவரை டிவிட்டரில் ப்பலோ செய்ய இதை கிளிக் செய்யவும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Arun Jaitley favourite to become India's finance minister

Arun Jaitley is a member of the Bharatiya Janata Party (BJP). He has previously held the portfolios as the Union cabinet Minister for Commerce and Industry, Law and Justice in the National Democratic Alliance government.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X