மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் நிரம்பி வழிந்த பெரும் புள்ளிகள்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மோடியின் பிரதமர் பதவியேற்பு நிகழ்ச்சியில் உலகின் பல நாடுகளின் தலைவர் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், இதனால் டெல்லி முழுவதும் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடதக்கது.

மேலும் இந்நிகழ்ச்சியில் அரசியல் தலைவர்கள் மட்டும் அல்லாது பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் என மொத்தம் 4,500 பேருக்கு அதிகமானோர் வந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். சில தொழிலதிபர்கள் இந்நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லை. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த பெரும் புள்ளிகள் யார்?? இதை பற்றி முழுமையாக பார்போம்.

ரிலையன்ஸ் குடும்பம்

ரிலையன்ஸ் குடும்பம்

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி அவரது மனைவி நித்தா அம்பானி மற்றும் அவரது இரு பிள்ளைகளும் வந்தனர். மேலும் முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானி குடும்பம் மற்றும் அவர்களது தாயாரான கோக்கிலாபென் அம்பானி அவர்களும் வந்திருந்தனர்.

அதானி குழுமம்

அதானி குழுமம்

பிரதமர் நரேந்திர மோடியின் மிகவும் நெருங்கிய நன்பரான அதானி குழுமத்தின் கெளதம் அதானி மற்றும் அவர்களது மனைவியும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

ஹிந்துஜா குழுமம்

ஹிந்துஜா குழுமம்

நாட்டின் முக்கிய குடும்ப வியாபார சிகரமான ஹிந்துஜா குழுமத்தின் தலைவர் அசோக் ஹிந்துஜா இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

எஸ்ஸார் குழுமம்

எஸ்ஸார் குழுமம்

இந்தியாவில் பல துறையில் வெற்றிக்கொடியை நாட்டிய எஸ்ஸார் குழுமத்தின் தலைவர் சசி ரூயா மற்றும் தலைமை நிர்வாக இயக்குனரான பிரசாந்த் ரூயா ஆகியோர் வந்திருந்தனர்.

மிட்டல் சகோதரர்கள்

மிட்டல் சகோதரர்கள்

ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர்களான சுனில், ராஜன் மற்றும் ராகேஷ் மிட்டல்கள் வந்து இருந்தனர், இவர்கள் மட்டும் அல்லாமல் டிஎல்எஃப் நிறுவனத்தின் சேர்மன் ராஜிவ் சிங், ஹிரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் முன்சால், சுஸ்லான் குழுமத்தின் சேர்மன் துல்சி டானி அவரகளும் கலந்து கொண்டனர்.

விமான போக்குவரத்து துறை

விமான போக்குவரத்து துறை

இந்நிகழச்சியில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிறுவனரான நரேஷ் கோயல் மற்றும் ஏர்ஏசியா நிறுவனத்தின் மித்தூன் சந்தில்யா ஆகியோர் வந்திருந்தனர்.

கலந்துகொள்ளாத பெரும் தலைகள்

கலந்துகொள்ளாத பெரும் தலைகள்

டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா மற்றும் அவரது டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சைரஸ் மிஸ்திரி வெளிநாடுகளில் இருந்த காரணத்தினால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

விஜய் மல்லையா

விஜய் மல்லையா

அதேபோல் மஹிந்திரா மற்றும் மஹிந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மஹிந்திரா மற்றும் யூபி குருப் நிறுவனத்தின் சொதப்பல் மன்னன் விஜய் மல்லையா அகியோரும் வரவில்லை.

நிதியமைச்சர் கனவு என்ன அச்சு???

நிதியமைச்சர் கனவு என்ன அச்சு???

எச்.டி.எஃப்.சி நிறுவனத்தின் தலைவரான தீப்க் பராக் மோடி தலைமையிலான அரசில் நிதியமைச்சராக பதவி வகிப்பார் என செய்திகள் வந்தது. ஆனால் இதை துவக்கம் முதலே மறுத்து வந்த அவர் இந்நிகழ்ச்சிகே வரவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ambani, Hinduja, Adani: The who’s who of India Inc at Modi’s swearing-in

A galaxy of industry leaders, including Mukesh Ambani, Gautam Adani, Sunil Mittal and Ashok Hinduja, today attended the star-studded swearing-in ceremony of Prime Minister Narendra Modi at Rashtrapati Bhavan.
Story first published: Tuesday, May 27, 2014, 11:09 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X