பணவீக்கத்தை “குறைக்க” வளர்ச்சியைப் “பெருக்க” திட்டம்: அருண் ஜேட்லி

டெல்லி: இந்திய நிதி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சரான அருண் ஜேட்லி இன்று காலை செய்தியாளரகளிடம் பேசியபோது, "தற்போது இந்திய பொருளாதாரத்தில் நிலவும் விலை உயர்வயை குறைத்தல், சந்தை முதலீட்டாளர்களும் நம்பிக்கை அதிகரித்தல் மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறையை கணிசமாக குறைப்பதே தலையாய கடமையாக கொண்டு செயல்பட உள்ளளோம்" என தெரவித்தார்.

மேலும் அவர், இந்திய பொருளாதாரம் கடந்த 5 ஆண்டுகளாக கடுமையான நெருக்கடிகளை சந்தித்து, தற்போது நிலையற்ற தன்மையில் இருந்து நிலையான தன்மையில் உந்தப்பட்டுள்ளது. இந்திய பொருளாதார வலிமையை குறைக்கும் பணவீக்கத்தை சரியான வழியில் எதிர்கொள்ள வேண்டியுள்ளது எனவும் அருண் ஜேட்லி அவர்கள் தெரிவித்தார்.

பதவி பிரமாணம்

பதவி பிரமாணம்

நேற்று டெல்லி பதவி பிரமாணம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அருண் ஜேட்லி, தான் நிதித்துறை மட்டும் அல்லாது பாதுகாப்பது துறையையும் கூடுதலாக கவணிக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் இது தற்காலிகமான என்றும் அவர் குறிப்பிட்டார்.

கேபினட் விரிவாக்கம்

கேபினட் விரிவாக்கம்

அமைச்சரவை வரிவாக்கும் செய்யும் வரை இந்த இடைப்பட்ட காலத்தில் மட்டுமே தனது கூடுதல் போர்ட்போலியோ-வான பாதுகாப்பு துறையை கவணிக்கப் போவதாக அருண் ஜேட்லி தெரிவித்தார்.

பாலிசி

பாலிசி

புதிய அரசின் மொத்த பாலிசியை அடுத்த ஒரு வாரத்தில் அறிவிக்கப்படும், இந்த பாலிசி முழுவதும் பணவீக்கத்தை குறைக்கவும், புதிய ஆட்சி மாற்றத்தானால் ஏற்படும் சரிவுகளை சமாளிக்கும், மேலும் விலை அதிகரிப்பை குறைப்பிற்காக மட்டுமே இருக்கும் என அருண் ஜேட்லி கூறினார். இதுமட்டும் அல்லாமல் சந்தை முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் பொறுப்பில் இருக்கிறேன் எனவும் தெரவித்தார், அதை செவ்வன் செய்ய திட்டமிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதார வளர்ச்சி

இந்திய பொருளாதாரம் 2008ஆம் ஆண்டில் நடந்த உலக பொருளாதார சரிவிற்கு முன்பு 9 சதவீதமாக இருந்தது. 2012-13ஆம் ஆண்டு காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 10 வருட சரிவான 4.5 சதவீதத்தை பதிவு செய்தது தற்போது 4.9 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் நடப்பு நிதியாண்டில் இதன் வளர்ச்சி 5.5 சதவீதமாக இருக்கும் என அவர் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+