மும்பை: வங்கி சேவையை இந்தியாவின் மூலைமுடுக்குகளுக்கும் கொண்டு செல்லும் நோக்கில் வங்கிகள் அல்லாத முன்று நிதியியல் நிறுவனங்களுக்கு இந்தியா முழுவதும் ஏடிஎம்களை அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.
பிடிஐ பேமண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், எஸ்.ஆர்.ஈ.ஐ இன்பராஸ்டக்சர் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் ரித்திசித்தி புள்ளியன்ஸ் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு வொயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க ஒப்புதல் பெற்றதாக ரிசர்வ் வங்கி இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஏடிஎம் சேவை
இந்தியாவில் இருக்கும் பெரும்பாலான ஏடிஎம்கள் அனைத்தும் வங்கிகளுடையதே, ஆனால் சில ஏடிஎம் மெஷின்கள் வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் அவையே நாம் வொயிட் லேபிள் ஏடிஎம் என்று அழைக்கிறோம்.
தற்போது செயல்படும் நிறுவனங்கள்
இந்தியாவில் வொயிட் லேபிள் ஏடிஎம்களை அமைக்க ஏற்கனவே நான்கு நிறுவனங்கள் ஒப்புதல் பெற்றுள்ளது. அவை டாடா கம்யூணிகேஷசன்ஸ் பேமண்ட் சொல்யூஷன்ஸ், ப்ரிசிம் பேமண்ட் சர்விசஸ் பிரைவேட் லிமிடெட், முத்தூட் பைனான்ஸ் லிமிடெட் மற்றும் வக்ரங்கீ லிமிடெட் அகிய நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் ஒப்புதல் பெற்றுள்ளது.
ரிசர்வ் வங்கி
ஜூன் 2012ஆம் ஆண்டு முதல் ரிசர்வ் வங்கி, இந்தியாவில் வங்கி அல்லாத நிதியியல் நிறுவனங்கள் ஏடிஎம்களை அமைக்க சட்டம் கொண்டு வந்தது. அதற்கு முன்பு வங்கிகள் மட்டுமே இந்தியாவில் ஏடிஎம் அமைக்க முடியும்.
வொயிட் லேபிள் ஏடிஎம்
இத்தகைய ஏடிஎம்களை அமைப்பதன் மூலம் இந்தியாவின் சிறு நகரங்கள் மற்றும் கிராம புறங்களில் இருக்கும் மக்களுக்கு ஏடிஎம் சேவை வழங்கும் நோக்கத்துடனே இத்திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications