டெல்லி: இந்தியாவில் மின்பற்றாக்குறை அதிகளவில் உள்ளது நாம் அனைவரும் அறிந்ததே, இதனை எதிர்கொள்ளும் வகையில் ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியா, இந்தியாவில் தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் இருக்கும் 30 விமான நிலையங்களில் சோலார் மின் உற்பத்தி தளங்களை அமைக்க போவதாக அறிவித்துள்ளது.
இத்தகைய சோலார் மின் உற்பத்தி தளங்களை அமைப்பதன் மூலம் விமான நிலையத்தின் மின்சார தேவையை கணிசமாக குறைக்க முடியும் மேலும் இது நாட்டின் வளத்தை பெருக்கவும், மற்ற அரசு அமைப்பு மற்றும் நிறுவனங்களுக்கும் அது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும் எனவும் ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
மோடி
பிரமர் மோடி தலைமையிலான அரசு தற்போது இந்தியாவில் நிலவு மின் பற்றாக்குறையை சோலார் மற்றும் காற்றாலைகளின் மூலம் குறைக்க பல கட்டங்களாக அதை நிறைவேற்றவும் திட்டம் தீட்டி வருகிறது. குஜராத்தில் பிரதமர் மோடி அவர்கள் அமைத்த மிக பெரிய சோலார் மின் உற்பத்தி தளம் இந்திய மின் உற்பத்தில் ஒரு மைல்கள்.
ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியா
தற்போது ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியா சமார் 50 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட லார் தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது, சில காலங்களில் அதை 150 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட தளங்களாக மாற்றப்படும் என ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
உபரி மின்சாரம்
இந்த 30 விமான நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும மின்சாரம் அனைத்து விமான நிலையத்திற்கு மட்டுமே உபயோகப்படுத்தப்படும். உபரி மின்சாரத்தை அருகில் இருக்கும் மின் கட்டுப்பாட்டு முனையத்திற்கு அனுப்பப்படும்.
ஒப்பந்தம்
இந்த சோலார் மின் உற்பத்தி தளத்தை அமைக்க ஏர்போர்ட் அத்தாரிடி ஆஃப் இந்தியா மற்றும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) ஒப்பந்தம் செய்துள்ளது.
விமான போக்குவரத்து செயலாளர்
இந்த ஒப்பந்த கூட்டத்தில் கலந்து கொண்ட விமான போக்குவரத்து துறையின் செயலாளர் அசோக் லாவாசா கூறுகையில், இத்தகைய சோலார் தளங்கள் நாட்டில் மின் அதிகரிக்காவிட்டாலும், கார்பன் உமிழ்வை கண்டிப்பாக குறைக்கும். இதனால் மக்களுக்கு சிறப்பான வாழ்வாதத்தை அளிக்க முடியும் என தெரவித்தார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications