பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்திற்கு இது மிகவும் மோசமான காலம் என்றே சொல்லலாம். இந்நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறி வருகின்ற இவ்வேலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் தூண்களில் ஒருவரான பி.ஜி. ஸ்ரீநிவாஸ் புதன்கிழமை அன்று இந்நிறுவனத்தை விட்டு விலகுவதாக தெரிவித்தார். இது இந்நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு என்றே சொல்லலாம். ஸ்ரீநிவாஸின் விலகல் இந்நிறுவனத்தை கண்டிப்பாக பாதிக்கும்.
இன்போசிஸ் நிறுவனத்தின் சீஇஓவான ஷிபுலால் தனது பணிக்காலம் முடிந்ததை அடுத்த இந்நிறுவனம் புதிய சீஇஒவை தேர்தெடுக்கும் பணியில் மிகவும் தீவரமாக உள்ளது. இதற்காக 6 பேர் கொண்ட பட்டியலை இண்போசிஸ் நிர்வாகம் தயாரித்துள்ளது. இதில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடதக்கது. மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் பொரும்பாலான ஊழியர்கள் புதிய சீஇஓ பதவிக்கு ஸ்ரீநிவாஸ் அவர்களை பரிந்துரை செய்தனர்.
பி.ஜி. ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீநிவாஸ் அவர்களின் பணி விலகல் குறித்து அவரிடம் கேட்டபோது, "இன்போசிஸ் நிறுவனத்தில் என்னுடைய பணிகாலம் முடிந்தது, மேலும் நிறுவனத்திற்கு என்னால் சிறந்த வளர்ச்சியை அளிக்க முடிந்தது. இன்போசிஸ் நிறுவனம் மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" என பி.ஜி. ஸ்ரீநிவாஸ் தெரவித்தார்.
பணி விலகல்
ஆனால் ஸ்ரீநிவாஸூம் சரி, இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் யாருமே இவரது பணி விலகளுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. உள் குத்து அதிகமாக இருக்கும் போல தெரிகிறது.
ஷிபுலால் - நாராயணமூர்த்தி
இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் சீஇஓவான நாராயணமூர்த்தி வருகைக்கு பிறகுதான் இன்போசிஸ் நிறுவனத்தின் நிலை தலைகீழாக மாறியது. இவர் வந்ததை தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் பலரும் நிறுவனத்தை விட்டு விலகினர். இதனால் நிறுவனத்தின் செயல்பாடு ஆட்டம் கண்டது. மேலும் ஷிபுலால் மற்றும் நாராயணமூர்த்தி அவர்களிடம் கேட்ட போது "ஸ்ரீநிவாஸ் அவர்களின் முயற்சி, திட்டங்கள் மூலம் இன்போசிஸ் பல உயரங்களை எட்டியது."
ஸ்ரீநிவாஸூம்... இன்போசிஸூம்...
ஸ்ரீநிவாஸ் இன்போசிஸ் நிறுவனத்தில் 1999ஆம் ஆண்டு சேர்ந்தார். அதற்கு முன் ஸ்ரீநிவாஸ் எபிபி நிறுவனத்தில் சுமார் 14 வருடம் பணியாற்றினார். மேலும் இவர் மெக்கானிக்கல் துறையில் இளநிலை பட்டம் பெற்றவர். இவரின் விலகல் இன்போசிஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பு.
புரியாத புதிர்
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து உயர் அதிகாரிகள் தொடர்ந்து வெளியேறுவதற்கான காரணம் என்ன என்பது தான் தெரியவில்லை இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications