பெங்களூரு: நாட்டில் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் என்று பெயர் பெற்றுள்ள இன்போசிஸ் நிறுவனம் விஷால் சிக்கா நியமனத்திற்கு முன் மிகப்பெரிய அளவில் ஆட்டம் கண்டது. இன்போசிஸ் நிறுவனத்தில் கடந்த 3 வருடத்தில் சுமார் 20 உயர் அதிகாரிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது இந்தியாவின் எந்த ஒரு மென்பொருள் நிறுவனங்களிலும் இத்தகைய நிகழ்வு சஞ்சரித்ததில்லை.
விஷால் சிக்கா நியணத்திற்கு பின்னும் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து போங்கட நீங்களும் வேண்டா உங்க வேலையும் வேண்டாம் என்று வெளியேறிய 7 உயர் அதிகாரிகளை வெளியேறியுள்ளனர்.
சாம்சன் டேவிட்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் MANA பிரிவு மட்டும் அல்லாலமல், கிளவுட், இன்ஃபாரஸ்டக்சர் மற்றும் பாதுகாப்புப் பிரிவுகளுக்குத் தலைவராக இருந்து சாம்சன் டேவிட் வெளியேறிய நிலையில் இப்பரிவின் புதிய தலைவராக நரசிம்ம ராவ் மனேபள்ளி நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பிரிவுகளின் ஆண்டு வருமானம் 1 பில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது.
சஞ்சய் புரோஹித்
இன்போசிஸ் நிர்வாகத் துணை தலைவர் மற்றும் முன்னாள் குளோபல் கன்சல்டிங் பிரிவு தலைவரான சஞ்சய் புரோஹித் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜீவ் பன்சால்
இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக (சிஎப்ஓ) செயல்பட்டு வந்த ராஜீவ் பன்சால் ராஜினாமா தனது சொந்த காரணங்களுக்குகாக ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறி ராஜீவ் தற்போது ஓலா நிறுவனத்தில் இணைந்துள்ளார்.
நித்தியாநந்தன் ராதாகிருஷ்னன்
இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமை இணக்க அதிகாரியான இவர் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பணியில் இருந்து விலகினார்.
பாலகிருஷ்னன்
இன்போசிஸ் நிறுவனத்தின் பீபிஒ பிரிவின் கிளையின் மூத்த அதிகாரியான அவர், இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். அவர் கடந்த 2013ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தில் பணி விலகினார்.
பிஜி. ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீநிவாஸ் கடந்த ஜூன் 10ஆம் தேதி இன்போசிஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக குழுவில் இருந்து விலகினார்.
அசோக் வெமூரி
இன்போசிஸ் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் உயரிய பதவியில் இருந்தவர். இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகி ஐகேட் நிறுவனத்தின் சீஇஓவாக சேர்ந்தார்.
சந்திரசேகர காகல்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவரான இவர் கடந்த மார்ச் மாதத்தில் நிறுவன பணியில் இருந்து முற்றிலும் விலகினார்.
சுப்பு
சுப்புரமணியம் கொப்பராஜூ, இன்போசிஸ் நிறுவனத்தின் அனைவரும் இவரை செல்லமாக சுப்பு என்றே அழைக்கப்படுவர். அவர் இன்போசிஸ் லேப்-இன் தலைவர் ஆவார். இவர் பாலகிருஷ்னன் வெளியேறிய சில நாட்களில் வெளியேறினார்.
ஸ்டீபன் ஆர் பிராட்
வட அமெரிக்காவின் பயன்பாடுகள் மற்றும் வளங்கள் பிரிவின் உயர் அதிகாரியான ஸ்டீபன் ஆர் பிராட் 2013ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
பவல் காட்சிகன்
இவர் இன்போசிஸ் நிறுவனத்தின் துணை தலைவர் மற்றும் தலைமை மார்கெட்டிங் அதிகாரியான இவர் 2013ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வெளியேறினார்.
கார்த்திக் ஜெயராமன்
ஆஸ்திரேலியாவின் பீபிஒ பிரிவின் விற்பனை உயர் அதிகாரியான இவர் செப்டம்பர் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகி அக்சன்சூர் நிறுவனத்திற்கு வெளியேறினார்.
ஹம்பெர்டோ அன்ரே
லத்தின் அமெரிக்காவின் பீபிஒ துறையின் தலைவரான அவர் அதே செப்டமர் மாதம் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகினார்.
சுதிர் சத்தூர்வேதி
இன்போசிஸ் நிறுவனத்தின் அமெரிக்காவின் பைனான்சியல் சர்விசஸ் பிரிவின் தலைவரான இவர் கடந்த ஜூலை மாதம் நிறுவனத்தை விட்டு விலகினார்.
பாசப் பிரதான்
இன்போசிஸ் நிறுவனத்தின் சேல்ஸ் மற்றும் மார்கெட்டிங் துறைக்கு தலைவரான இவர் நிறுவன பபணிகளில் நாட்டம் குறைந்து புதிய நிறுவனத்தை துவங்கினார். இன்போசிஸ் நிறுவனத்தில் உயர் அதிகாரிகளின் விலகல் அவர் முதலே துவங்கியது.
அனுப் உபாதயா
உயர்மட்ட நிர்வாகக் குழுவில் செய்யப்பட்ட மாற்றங்களை விரும்பாத முன்னாள் இன்போசிஸ் பிபிஓ பிரிவின் சீஇஓ அனுப் உபாதயா இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு முழுமையான வெளியேறியுள்ளார். இவரது பதிவியில் தற்போது அனந்த ராதாகிருஷணன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications