பிரதமர் நரேந்திர மோடி முன்னிறுத்தும் 10 விஷயங்கள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியாவில் சிறப்பான ஆட்சியை அமைப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தன்னுடைய அரசாங்கத்தின் 10 முன்னுரிமை விவகாரங்களை பட்டியலிட்டுள்ளார். பொருளாதாரத்தை உத்வேகப்படுத்துவதும் மற்றும் செயல்பாட்டை சுமுகமாக்குவதும் தான் இந்த முன்னுரிமை பட்டியலின் நோக்கமாகும்.

 

முதல் 100 நாட்களுக்கான திட்டங்களைத் தயாரிக்குமாறு அனைத்து அமைச்சர்களையும் திரு.நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக திரு.எம்.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். திறமையான நிர்வாகத்திற்கும், திட்டங்களை அளித்தல் மற்றும் செயல்படுத்துதல் ஆகியவற்றை முன்நிறுத்திய 'மிகவும் முக்கியமான' விஷயங்களுக்கு மோடி அழுத்தம் கொடுத்துள்ளார் என்று ஊடகங்களை சந்தித்த போது நாயுடு விளக்கம் கொடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிறுத்தும் 10 விஷயங்கள்!!

நாட்டின் வளர்ச்சிக்கு மாநிலங்களின் வளர்ச்சி இன்றியமையாதது என்பதை நம்பும் அவர், மாநிலங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வரும் விவகாரங்களுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு அமைச்சரவை குழுவினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

முதலீட்டை அதிகரித்தல், குறித்த காலத்திற்குள் கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுதல் மற்றும் நாட்டின் நலனுக்காக இயற்கை வளங்களை பயன்படுத்துதல் போன்றவை உள்ளிட்ட 10 அம்ச தொலைநோக்கு திட்டத்தை, அமைச்சரவை கூட்டத்தின் போது மோடி அளித்துள்ளார்.

அந்த வகையில் மோடி அவர்கள் முன்நிறுத்தும் 10 முதன்மையான விஷயங்கள் இங்கே பார்போம்

1. நிர்வாகத்தில் ஸ்திரத்தன்மையை உருவாக்குதல்.

2. புதுமையான எண்ணங்கள் மற்றும் புதியவர்களை அமைச்சரவையில் வரவேற்று தேவையான பணி சுதந்திரம் அளித்தல்.

3. கல்வி, சுகதாரம், குடிநீர், பவர் மற்றும் சாலைகளுக்கான திட்டங்களை முன்நிறுத்துதல்.

4. நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை. எலக்ட்டிரானிக்-ஏல முறைக்கு ஊக்கம் தருதல்.

5. அமைச்சகங்களுக்கு இடையிலான பிரச்னைகளை தீர்க்கும் அமைப்பை உருவாக்குதல்.

பிரதமர் நரேந்திர மோடி முன்னிறுத்தும் 10 விஷயங்கள்!!

6. மக்களை சார்ந்த அரசு செயல்திட்டத்தை கொண்டு வருதல்.

7. பொருளாதாரம் தொடர்பான பிரச்னைகளை கவனித்தல்.

8. கட்டுமானம் மற்றும் முதலீட்டு சீர்திருத்தங்கள்.

9. குறித்த காலத்திற்கேற்ற கொள்கைகளை செயல்படுத்துதல்.

10. அரசின் கொள்கையில் நிலைத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உருவாக்குதல்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Narendra Modi's list of top 10 priorities for the economy

Giving special emphasis to governance, Prime Minister Narendra Modi on Thursday unveiled a top 10 priorities' list for the government. The aim is to kick-start economic growth and ensure a smooth decision making process.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X