பெங்களுரூ:இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ பதவிக்கான போட்டியில், முன்னிலையில் இருந்த பி.ஜி.ஸ்ரீநிவாஸ் அவர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய காரணத்தினால், அடுத்த போட்டியாளர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்போசிஸ் நிறுவனத்தின் தகவல் படி சீஇஓ பதவிக்கு, நிறுவன போட்டியாளர்களில் தற்போது முன்னிலையில் இருப்பது சந்தீப் டாட்லானி. மேலும் இப்போட்டியில் இந்நிறுவனத்தின் மனீஷ் டேன்டான் மற்றும் ரவி குமார் அகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
யூபி. பிரவின் ராவ்
இந்நிறுவனத்தின் தலைவரான யூபி. பிரவின் ராவ் இன்னும் சில நாட்களில் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து வெளியேறுவதன் காரணமாக, இவர் சீஇஓ பந்தையத்தில் சேர்வில்லை. மேலும் இவரது பணிவிலகல் இன்னும் சில நாட்களில் எதிர்ப்பார்க்கலாம்.
ஸ்ரீநிவாஸ்
ஸ்ரீநிவாஸ் அவர்களின் பணி விலகலின் காரணமாக இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ தேடுதல் பணி தலைகீழாக புரட்டிபோட்டுள்ளது. இதனால் இன்போசிஸ் உயர் மட்ட குழு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது.
சந்தீப் டாட்லானி
இன்போசிஸ் நிறுவனத்தின் ரிடைல், சிபிஜி மற்றும் லாகிஸ்டிக்ஸ் பிரிவுகளின் தலைவர் சந்தீப் டாட்லானி. மேலும் இத்துறைகளில் வருவாய் இன்போசிஸ் நிறுவன வருவாயில் ஒன்றில் ஐந்து பங்கு என்பது குறிப்பிடதக்கது. மேலும் மனீஷ் டேன்டான் லைப் சன்ஸ் பரிவின் தலைவர், ரவி குமார் இன்சூரன்ஸ், கார்ட்ஸ் மற்றும் பேமென்ட் பரிவுகளின் தலைவர்.
புதிய சீஇஓ
இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ நிறுவனத்தை விட்டு வெளி ஆளாக தான் கண்டிப்பாக இருக்கும் என நிர்வாக குழு தெரிவித்தாலும். இன்போசிஸ் நிறுவனத்தின் அதிகாரிகளின் தகுதிகளை மிகவும் உண்ணிப்பாக கணக்கப்பட்டு வருகிறது இன்போசிஸ்.


Click it and Unblock the Notifications