மும்பை: இந்தியாவில் புகைபிடிப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் அப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்ததே இல்லையாம்!!. ஐசிஐசிஐ லோம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் புகையிலை பற்றி எடுத்த சர்வேயில் கலந்து கொண்டவர்களில் 10-ல் 9 பேர் புகைப்பழக்கத்தை விட்டொழிக்க முயற்சி செய்ததில்லை என்று கண்டறிந்துள்ளது.
புகையிலை பழக்கத்தைக் கொண்டிருப்பவர்களின் சமூக மற்றும் உளவியல் வாழ்க்கை முறையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது மற்றும் பல்வேறு வகையிலான புகையிலான பயன்பாட்டு வழிமுறைகள் ஆகியவற்றைப் பற்றி இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய அளவில் மும்பை, கொல்கத்தா, அகமதாபாத், லக்னோ மற்றும் ஹைதராபாத் ஆகிய நான்கு மண்டலங்களில் உள்ள 1,111 பேர்களிடம் இந்த சர்வே செய்யப்பட்டது.
மேலும், 70% பேர் சிகரெட்டுடன் புகையிலைப் பழக்கத்தைத் துவங்கியுள்ளனர் என்றும் மற்றும் வாரத்திற்கு ரூ.380/- ஐ இதற்காக செலவு செய்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று எண்ணுபவர்கள் 62% பேரும், பணிச்சுமையின் காரணமாக புகைப்பழக்கம் கொண்டவர்கள் 54%- பேரும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையால் புகைப்பழக்கத்தை அதிகரித்துக் கொண்டவர்களாக 42% பேரும் உள்ளனர்.
இந்த சர்வேயில் கண்டறியப்பட்ட முக்கியமான தகவல்கள்
மும்பை
மும்பையைச் சேர்ந்தவர்களில் 41% பேர் சிகரெட் பயன்படுத்துவதை கடந்த 2-3 ஆண்டுகளில் அதிகரித்தும், 14% பேர் பயன்பாட்டை குறைத்தும் உள்ளனர்.
மன அழுத்தம்
புகைப்பழக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும் என்று எண்ணுபவர்கள் 62% பேரும், பணிச்சுமையின் காரணமாக புகைப்பழக்கம் கொண்டவர்கள் 54% பேரும் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்னையால் புகைப்பழக்கத்தை அதிகரித்துக் கொண்டவர்களாக 42% பேரும் உள்ளனர்.
4 முதல் 5 சிகரெட்
மும்பையில் ஒரு நாளைக்கு 4 முதல் 5 சிகரெட்களை புகைக்கின்றனர், பதிலளித்தவர்களில் மும்பையில் வசித்து வருபவர்களில் 95% பேர் புகையிலைப் பழக்கத்தை விட்டொழிக்க முயற்சி செய்ததே இல்லை.
புகையிலை
மும்பையைப் பொறுத்த வரையில் புகையிலை மெல்லுவதும், பீடி புகைப்பதும் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்ற போதைப்பழக்கங்களாக உள்ளன.
உடல் நல கேடு
புகையிலையை நெடுங்காலமாக பயன்படுத்தி வந்தாலும் உடலுக்கு மோசமான விளைவுகள் எதுவும் வரவில்லை, ஆனால் புகையிலையால் மோசமான விளைவுகள் வரும் என்று மும்பையில் பதிலளித்தவர்களில் 54% பேர் குறிப்பிட்டுள்ளனர்.
இன்சூரன்ஸ்
பிற நகரங்களுடன் ஒப்பிடுகையில் மும்பையில் தான் மிகவும் அதிகமான எண்ணிக்கையிலான மோசமான உடல் கோளாறுகளுக்கு ஏற்ற இன்சூரன்ஸ் பாலிசிகள் உள்ளன. இதில் புகையிலை மெல்லும் பழக்கமும் அடங்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications