சென்னை: இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மே மாதம் அதிகரித்து, நாட்டில் இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் ஏற்றுமதி அதிகரித்துள்ளதால் டாலர் மற்றும் அன்னிய நாணயங்களின் இருப்பு அதிகரித்து இந்திய ருபாய் மதிப்பு 58 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதில் மஹிந்திரா நிறுவன தனது இரு சக்கர வாகன விற்பனையில் 131 சதவீதம் உயர்வை சந்தித்துள்ளது. மேலும் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆட்டோமொபைல் சந்தை மிகுந்த புத்துணர்வுடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை மற்றும் ஏற்றுமதி விவரங்களை பார்போம்.
மஹிந்திரா & மஹிந்திரா
இந்நிறுவனத்தின் இந்திய விற்பனை கடந்த மே மாதத்தில் மட்டும் 131 சதவீத உயர்வை பெற்றுள்ளது, அதேபோல் 946 இரு சக்கர வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது இதன் மதிப்பு 16.5 பில்லியன் டாலர்.
ஹீரோ மோட்டோகார்ப்
இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன விற்பனை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் கடந்த மே மாதம் 602,481 வாகனங்களை விற்றுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 8 சதவீதம் உயர்வாகும். மேலும் இந்நிறுவனம் ஹோண்டா நிறுவனத்திடம் இருந்து பிரிந்ததை தொடர்ந்து இந்நிறுவனம் தொழில்நுட்பத்தில் அதிகப்படியாக முதலீடு செய்து வருகிறது.
டிவிஎஸ்
சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் நிறுவனம், 2014ஆம் ஆண்டின் மே மாதத்தில் 2,10,293 வாகனங்களை விற்று 27.33 சதவீத உயர்வை எட்டியுள்ளது.
மாருதி சுசூகி
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் 90,560 கார்களை விற்றுள்ளது, அதேபோல் 10,365 கார்களை ஏற்றுமதி செய்துள்ளது குறிப்பிடதக்கது.
பஜாஜ் ஆட்டோ
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஏற்றுமதி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ விற்பனையில் 4 சதவீத உயர்வும், ஏற்றுமதியில் 40 சதவீத உயர்வும் கண்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார்
இந்தியாவின் இரண்டாம் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்றுமதியில் 12.8 சதவீத உயர்வடைந்துள்ளதாக இந்நிறுவனத்தின் விற்பனை பரிவின் தலைவர் ராகேஷ் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications