விஷால் சிக்காவிற்கு வாய்ப்புகள் பிரகாசம்!! இன்போசிஸ் நாராயணமூர்த்தி..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சிஇஓ யார் என்று ஐ.டி. உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது. ஜெர்மனி நாட்டேைச் சேர்ந்த சாப் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகக் குழு உறுப்பினரானவிஷால் சிக்காதான் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ என்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

 

இப்பதவிக்கு நந்தன் நிலகேனி மற்றும் பி.ஜி. ஸ்ரீனிவாஸ் உள்ளிட்டவர்களின் பெயர்கள் கடந்த சில வாரங்களாக அடிபட்டு வந்தன. யாரை சிஇஓவாகத் தேர்ந்தெடுப்பது என்ற குழப்பமும் இன்போசிஸ் டாப் வட்டாரத்தில் நீடித்து வந்தது குறிப்பிடதக்கது.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

குஜராத் மாநிலத்தில் உள்ள வதோதராவில் பிறந்த 47 வயதான சிக்காதான் இன்போசிஸ் நிறுவனத்தின் அடுத்த சிஇஓ என்பது தற்போது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது என இன்போசிஸ் நிறுவநத்தின் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரிகள் தெரவித்தனர்.

நாராயணமூர்த்தியின் சாய்ஸ்

நாராயணமூர்த்தியின் சாய்ஸ்

இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி மற்றும் மூத்த தனி இயக்குநர் காமத் ஆகியோரின் சாய்ஸும் சிக்காதான் என்றும், இதற்காகவே சாப் நிறுவனத்தை விட்டு கடந்த மாதத் துவக்கத்திலேயே சிக்கா வெளியேறினார் என்றும் இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

நியமனக் குழு

நியமனக் குழு

சிஇஓவைத் தேர்ந்தெடுக்க நியமிக்கப்பட்ட கமிட்டியில் காமத் தவிர, பயோகான் நிறுவனர் கிரண் மசூம்தார்-ஷா மற்றும் அசோக் லேலண்டின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆர். சேஷசாயி ஆகியோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு வாரக் காலம்
 

ஒரு வாரக் காலம்

சிக்காவின் பணி நியமன விவரம் குறித்து அடுத்த சில நாட்களுக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது.

உறுதியான பதில் கிடைக்கவில்லை

உறுதியான பதில் கிடைக்கவில்லை

ஆனாலும் இது குறித்த இமெயில்களுக்கு நாராயண மூர்த்தியோ அல்லது சிக்காவோ பதில் ஏதும் அனுப்பவில்லை. எல்லாம் ஊகங்கள்தான் என்றும் இன்போசிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Former SAP executive Vishal Sikka set to be new CEO of beleaguered Infosys

Former SAP board member Vishal Sikka is all but certain to be chosen as the new CEO of Infosys, according to two people aware of the company's plan. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X