டெல்லி: இவ்வுலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் கல்வி அறிவு மிகவும் அவசியமானது. இதை உணர்ந்த மத்திய அரசுகள் அனைவருக்கும் கல்வி என்ற "சர்வ ஷிக்சா அபியான்" என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் மூலம் நாட்டிலி உள்ள குழந்தைகள் அனைவரும் இலவசமாக கல்வியை பெற வழிவகை செய்யப்படுகிறது.

இப்போது இத்திட்டத்தின் மூன்றாம் கட்ட செயல்பாடுகள் தொடங்கிய நிலையில் "சர்வ ஷிக்சா அபியான் III" என்ர திட்டத்திற்கு உலக வங்கி 100 கோடி டாலர் நிதியுதவி அளித்துள்ளது.
இந்த நிதியுதவிக்கான ஒப்பந்தத்தில், பொருளாதார விவகாரங்கள் துறை இணை செயலர் நிலயா மிட்டேஷ் மற்றும் உலக வங்கியின் இந்தியாவிற்கான செயல்பாட்டு ஆலோசகர் மைக்கேல் ஹனி ஆகியோர் கையொப்பமிட்டனர்.
உலகளவில் தரமான கல்வியை அளிக்கும் நோக்கில் உலக வங்கி ஆரம்ப கல்வி திட்டங்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நிதியுதவி அளித்து வருகிறது. இதில இந்தியாவின் சர்வ ஷிக்சா அபியான் திட்டமும் ஒன்று.


Click it and Unblock the Notifications