மும்பை: அனைவரும் எதிர்பார்த்த படியே ராகுராம் ராஜன் இன்று வெளியிட்ட புதிய நிதியியல் கொள்கையில் பணவீக்கத்தை குறைக்கும் பொருட்டு எந்த விதமான மாற்றமும் செய்யவில்லை. மேலும் இந்தியாவில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ரகுராம் ராஜன் வெளியிட்ட முதல் நிதியியல் கொள்கை என்பது குறிப்பிடதக்கது.
அதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 8 சதவீதமாகவே இருக்கிறது. இந்த வட்டி விகிதத்தை ரெபோ விகிதம் என்று அழைக்கப்படும். அதேபோல் ரிசர்வ் வங்கி, வங்கிகளிடம் இருந்து பெறும் தொகைக்கான வட்டி விகிதம் 7 சதவீதமாகவே உள்ளது. இதை ரிவர்ஸ் ரெபோ விகிதம் என்று அழைக்கப்படும்.
மேலும் இந்த நிதியியல் கொள்கை முற்றிலும் பணவீக்கத்தை குறைக்கும் விதமாக இருந்தது. இதை பற்றி முழுமையாக பார்போம்.
எஸ்.எல்.ஆர் விகிதம்
மேலும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் குறிப்பிட்ட தொகையை வைத்திருக்க வேண்டும், இதை அரசு பத்திர வடிவிலோ அல்லது தங்க கட்டிகள் விடிவிலோ வங்கிகள் வைப்பு நிதியாக வைத்திருக்க வேண்டும்.இதை எஸ்எல்ஆர் விகிதம் என்று அழைக்கப்படும்.
இந்த வகிதத்தை 23.0 சதவீதத்தில் இருந்து 50 அடிப்படை புள்ளிகளில் குறைத்து 22.5 புள்ளிகளாக நிர்ணயம் செய்துள்ளது.
உணவு பணவீக்கம்
பணவீக்கத்தின் எதிரொலியாக நாட்டில் உணவு பொருட்களின் விலை கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் அதிகப்படியாக இருந்தது. மேலும் சில பொருட்களில் அதிகப்படியான விலை மே மாதம் வரையும் நீடித்தது.
நுகர்வோர் பணவீக்கம்
உணவு பணவீக்கம் அதிகப்படியாக இருந்ததால் நாட்டில் நுகர்வோர் பணவீக்கமாக இருந்தது, ரிசர்வ் வங்கியின் கணிப்பின் படி இந்த பணவீக்கம் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என தெரிகிறது.
பொருளாதார வளர்ச்சி
2014ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சியில் எல் நினோவின் பாதிப்பு அதிகளவில் இருந்தது. மேலும் பருவ மழையின் காரணமாக உணவு பொருட்களின் உற்பத்தி சுமார் 60 சதவீதம் குறைந்தது. மேலும் எண்னெய் மற்றும் தங்க இறக்குமதி குறைந்ததால் நாட்டின் பொருளாதாரம் சரிவை தடுத்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications