மும்பை: மத்தியில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வெளியிடும் முதல் நிதியியல் கொள்ளையை இன்று மாலை ரிசர்வ வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட உள்ளார். நாட்டில் பணவீக்கத்தை குறைக்க நிதியமைச்சகத்துடன் இணைந்து அதிரடியாக செயல்பட்டு வருகிறது ரிசர்வ் வங்கி.
மேலும் நிதியியல் வல்லுனர்களின் கணிப்பின் படி ரிசிர்வ் வங்கி, வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான ரெப்போ விகிதத்தை 8 சதவீதத்தில் இருந்து மாற்றாது என தெரிவிக்கின்றன.
நிதியியல் கொள்கை
மேலும் கடந்த நிதியியல் கொள்கையில் ரிசர்வ் வங்கி பணபுழக்க விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளை குறைத்து 23 சதவீதத்தில் இருந்து 22.5 சதவீதமாக குறைத்தது. அதை மாற்றாமல் இருந்தால் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிக்காமல் இருக்கும்
தங்க இறக்குமதி
தங்க இறக்குமதியில் செய்த சில தளர்வுகளால் தங்க இறக்குமதி அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக டாலருக்கும் எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக ரூபாய் மதிப்பு உயர்ந்து கொண்டே இருந்தது குறிப்பிடதக்கது. இன்றைய வர்த்தக நிலவரப்படி டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 59.32 ரூபாய் ஆகும்.
ரகுராம் ராஜன்
ராஜன் ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியை எடுத்து கொண்ட பின்பு நாட்டில் நிலவிய கடுமையான நுகர்வோர் பணவீக்கத்தை குறைக்க ரெப்போ விகிதத்தை சுமார் 75 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தார்.
ராஜன் - ஜேட்லி
இந்தியாவின் நிதியமைச்சரான அருண் ஜேட்லி நாட்டின் வளர்ச்சியில் அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறார். இதனை எதிர்கொள்ளும் வகையில் முக்கிய இலக்குகளை நிர்னயம் செய்து கொண்டு ராஜன் உதவியுடன் செயல்பட்டு வருகிறார் ஜேட்லி. அந்த இலக்குகளை இப்போது பார்போம்.
இலக்குகள்
ஜனவரி 2015ஆம் ஆண்டிற்குள் நாட்டில் நுகர்வோர் பணவீக்க குறியீடு 8 சதவீதமாக குறைக்கவும், 2016ஆம் ஆண்டில் அதை 6 சதவீதமாக குறைக்கு வேண்டும் என்றும், மேலும் நாட்டின் வளர்ச்சி 5 சதவீதம் முதல் 6 சதவீதம் வரை எட்ட வேண்டும் என்பதும் ஆகும்.


Click it and Unblock the Notifications