பெங்களுரூ: இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனமான டாடா குழுமத்தின் கிளை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விசஸ் நிறுவனத்தின் சிஇஒவான என். சந்திரசேகரன் அவர்களின் சம்பளம் இந்த வருடம் சுமார் 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
2013ஆம் ஆண்டில் 11.7 கோடியாக இருந்த இவரின் சம்பளம் தற்போது 18.7 கோடியாக உயர்ந்துள்ளது. இதனால் இந்தியாவில் அதிகளவில் சம்பளம் வாங்கும் சிஇஓக்களில் சந்திரசேகரன் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவரிடம் நிறுவனத்தின் 88,528 பங்குகள் இவர் வசம் உள்ளது. அப்ப மற்ற நிறுவனங்களின் சிஇஓக்களுக்கு சம்பளம் எவ்வளவு இருக்கும்
இன்போசிஸ்
அடுத்த சிஇஓ இவர் தான் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் பி.ஜி.ஸ்ரீநிவாஸ் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு விலகி ஹாங்காங் நிறுவனத்தில் சேர்ந்தார். இவரின் சம்பளம் 7.8 கோடி ரூபாய்.
விப்ரோ
இன்போசிஸ் நிறுவனத்திற்கும் எச்சிஎல் நிறுவனத்திற்கு அனைத்து விதமான துறைகளில் சரியான அளவில் போட்டி கொடுக்ககூடிய ஒரு இந்திய நிறுவனம் என்றால் அது, விப்ரோ தான். இந்நிறுவனத்தின் சிஇஓவான டி.கே. குரியென் அவர்களின் சம்பளம் 6.5 கோடி.
நிறுவன வளர்ச்சி
சந்திரசேகரன் அவர்களின் சம்பள உயர்விற்கு முக்கிய காரணம் இந்நிறுவனத்தின் அதிகப்படியான வளர்ச்சியே ஆகும். 2014ஆம் நிதியாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் வருவாய் 16.2 சதவீதம் உயர்ந்து 13.4 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
லாபம் உயர்வு
2013ஆம் ஆண்டில் தகவல் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியை இந்நிறுவனத்திற்கு பெரிதாக கைகொடுத்தது. இதனால் இந்நிறுவனத்தின் லாப விகிதம் 22.9 சதவீதம் உயர்ந்து 3.1 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்நிலையில் நிறுவனத்தின் வளர்ச்சியை பொருத்து இவரது சம்பளமும் அதிகரித்துள்ளது குறிப்பிடதக்கது.
தகவல் தொழில்நுட்பம்
இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. (கூடவே போட்டியும் அதிகரித்து வருகிறது.) அமெரிக்காவை அடுத்து ஐடி துறையில் சிறந்து விழங்கும் ஒரு நாடு என்றால் அது இந்தியா தான்.
டாப் 5 டெக்னாலஜிஸ்
இன்றைய ஐடி துறையில் மொபிலிட்டி, பிக் டேட்டா, கிளவுட் கம்பியூடிங், சமுக வலைதளம் மற்றும் ரோபாடிக்ஸ் ஆகிய 5 பரிவுகளும் மிகவும் சிறப்பாக வளர்ந்து வருகிறது. அடுத்த 5 முதல் 10 வருடத்திற்கு ஐடி துறையை இவைதான் ஆளப்போகிறது என சந்திரசேகரன் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது



Click it and Unblock the Notifications