டோக்கியோ: ஜாப்பான் நாட்டின் சாப்ட்பாங்க் நிறுவனம் தனது மொபைல் விற்பனை கடைகளில், விற்பனையை அதிகரிக்க சேல்ஸ் மேன் செய்யும் வேலையில் ஒரு ரோபோட்டை அமைத்துள்ளது.
இந்த ரோபோடின் பெயர் பெப்பர் ரோபோட், இத்தகைய ரோபோட்டுகளை அமைப்பதன் மூலம் வாடிக்கையாளருக்கு தரமான சேவையை அளிக்க முடியும் என இந்நிறுவனம் நம்புகிறது. சாப்ட்பாங்க் நிறுவனம் ஜாப்பானில் தொலைதொடர்பு, பிராட்பேண்ட், ஈ-காமர்ஸ், இண்டர்நெட், மீடியா, தொழில்நுட்ப சேவைகள், நிதி, ஊடகங்கள் மற்றும் மார்கெட்டிங், மற்றும் பிற தொழில் துறைகளில் செயல்பட்டு வருகிறது.
சாப்ட்பாங்க்
இந்நிறுவனம் பிரான்சு நாட்டின் அல்டிபரன் நிறுவனத்தின் உதவியை கொண்டு பெப்பர் ரோபோட்டை உருவாக்கியுள்ளது. அல்டிபரன் நிறுவனத்தை சாப்ட்பாங்க் நிறுவனம் 2012ஆம் ஆண்டு கைபற்றியது. மேலும் ரோபோட் தயாரிப்புக்காக சாப்ட்பாங்க் நிறுவனம் ஹான் ஹாய் பிரிசிஸன் நிறுவனத்தின் உதவியை பெற்றுள்ளது.
ஹாய் ரோபோட்
இந்நிறுவனத்தின் தகவல் படி பெப்பர் ரோபோட் இன்னும் முழுமையாக தயாராக வில்லை இதனை வரும் கோடை காலத்தில் சாப்ட்பாங்க் நிறுவனத்தின் சில முக்கிய மொபைல் விற்பனை கடைகளில் நிறுவ இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வேலைக்கார ரோபோட்
மேலும் இந்நிறுவனத்தின் இதே கூட்டணியில் விட்டு வேலை செய்யும் ஒரு ரோபோட்டை உருவாக்கியுள்ளது. இது வாயதானோருக்கும் அதிகளவில் உதவும் படியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதியவர் நிறைந்த ஜாப்பான்
உலகிலேயே அதிகளவில் முதியவர்கள் வாழும் நாடு என்றால் அது ஜாப்பான் ஆக தான் இருக்க முடியும். இத்தகைய ரோபோட் இவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என ஜாப்பான் நாட்டு மக்கள் தெரிவிக்கின்றனர்.
ரோபோட் சந்தை
ஜாப்பான் நாட்டின் ரோபோட் சந்தையின் 2012ஆம் ஆண்டின் மதிப்பு 860 பில்லியன் யென். வரும் 2020ஆம் ஆண்டிற்குள் இதன் மதிப்பு முன்று மடங்கு உயர்ந்து 2.85 டிரில்லியன் யெனாக உயரும் என எதிரிபார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications