மும்பை:ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்ட நிதியியல் கொள்கையில் எஸ்.எல்.ஆர் விகிதம் எனப்படும் Statutory Liquidity Ratioவில் 50 அடிப்படை புள்ளிகளை மட்டும் குறைந்ததைத் தவிர, பிற முக்கியமான வட்டி விகிதங்களில் எந்த விதமான மாற்றமும் இல்லை. இதனால் அதிகமான வட்டி விகிதங்களுக்கு எதிராக ஏற்கனவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளில் முதல் இடம் பிடித்திருப்பது ஆடை ஏற்றமதி என்பது குறிப்பிடதக்கது.
வங்கிகள்
இரண்டாவது இரண்டு-மாத நிதிக் கொள்கைக்கான அறிக்கை பற்றி பதிலளித்த திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு.ஏ.சக்திவேல், 'SLR-ல் 50 அடிப்படை புள்ளிகளை குறைத்திருப்பது வரவேற்கத்தக்க செயல்பாடாகும், ஏனெனில் அதன் மூலம் பணம் தேவைப்படும் நிறுவனங்களுக்கு வங்கிகள் மேலும் உதவ முடியும்' என்றார்.
எஸ்.எல்.ஆர் விகிதம்
50 அடிப்படை புள்ளிகள் குறைத்ததன் மூலம் ரிசர்வ் வங்கி இருப்பில் சுமாப் 40,000 கோடி ரூபாய் பணம் வங்கிகளிடம் சேர்ந்துள்ளது. இதனால் வங்கிகளின் கடன் அளிக்கும் தொகை அதிகரிக்கும். இதனால் வருமானமும் அதிகரிக்கும்.
பின்னலாடை ஏற்றுமதி
பின்னலாடை ஏற்றுமதித் துறையை போட்டிகளை எதிர்கொள்ளச் செய்ய, இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றுமதிகளுக்கென பிரத்யோகமான பகுதியை கொண்டு வர வேண்டும் மற்றும் ஏற்றுமதிக்கு முன்னர் மற்றும் பின்னர் என ஏற்றுமதி கடனை 7 சதவீதமாக நிர்ணயிக்க வேண்டும். இது நெடுநாட்களாக நிலுவையிலுள்ள கோரிக்கைே என்று அவர் மேலும் கூறினார்.
அரசின் உதவி
பேக்கிங் கிரெடிட் குறித்து பதிலளிக்கையில், மத்திய அரசின் பட்ஜெட்டைத் தொடர்ந்து தான் கார்மண்ட் துறையில் பேக்கிங் கிரெடிட்-ற்கான விகிதங்கள் நீட்டிக்கப்பட்டு உதவி கிடைக்கும். இதற்கு இடையில், பேக்கிங் கிரெடிட்களுக்கு நாங்கள் அதிகமான வட்டி விகிதங்களை கொடுத்து வருகிறோம், ஏனெனில், அரசு அளித்து வந்த 3 சதவீத வட்டி பண உதவி மார்ச் 31, 2014-உடன் காலாவதியாகிவிட்டது' என்றார்.


Click it and Unblock the Notifications