ராக்வெல் ஒப்பந்தத்தை கைபற்ற எச்.சி.எல், இன்போசிஸ் கடும் போட்டி!!

பெங்களுரூ: ஆட்டோமேஷன் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் அமெரிக்காவை சேர்ந்த ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்தின் 200 மில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தத்தை கைபற்ற இந்திய நிறுவனங்களான எச்.சி.எல் மற்றும் இன்போசிஸ் நிறுவனம் கடுமையாக போட்டி போடுகிறது. ராக்வெல் நிறுவனம் ஆட்டோமேஷன் கருவிகள் மற்றும் அதற்கான சாப்வேர்களை தயாரித்து வருகிறது.

ராக்வெல் ஆட்டோமேஷன் தனது நிறுவனம் தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மாற்றியமைக்கவும், கிளவுட் எக்கோ சிஸ்டம் ஹப் ஆகியவற்றை உருவாக்குகிறது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 150 முதல் 200 மில்லியன் டாலர் வரை மதிப்பிடப்படுகிறது.

எச்.சி.எல் நிறுவனத்திற்கு வாய்ப்பு அதிகம்

எச்.சி.எல் நிறுவனத்திற்கு வாய்ப்பு அதிகம்

இந்த ஒப்பந்தத்தை கைப்பற்றுவதில் அதிக வாய்ப்பு கொண்டது எச்.சி.எல் நிறுவனம் தான். இன்பாரஸ்டக்சர் மேனேஜ்மென்ட் சர்விசஸ் துறையில் அதிக அனுபவம் பெற்றது எச்.சி.எல் தான். மேலும் ஷிபுலால் தலைமையிலான இன்போசிஸ் இந்த ஒப்பந்தத்தை கைப்பற்ற தவம் கிடைக்கிறது.

ஐ.எம்.எஸ்

ஐ.எம்.எஸ்

தகவல் தொழில்நுட்ப துறையில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஐஎம்எஸ் என்று அழைக்கப்படும் இன்பாரஸ்டக்சர் மேனேஜ்மென்ட் சர்விசஸ் நான்காம் இடத்தில் உள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் 2014ஆம் ஆண்டின் மொத்த வருவாயில் 7.1 சதவீதம் இத்துறையின் மூலம் கிடைத்ததே.

ஹார்லி டேவிட்சன்

ஹார்லி டேவிட்சன்

ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தை பரிந்துறை செய்தது ஹார்லி டேவிட்சன் நிறுவனம் தான். இன்போசிஸ் இத்துறையில் கைபற்றிய மிகபெரிய ஒப்பந்தங்களில் ஹார்லி டேவிட்சனின் ஒப்பந்தமும் ஒன்று.

அமெரிக்காவில் இன்போசிஸ்

அமெரிக்காவில் இன்போசிஸ்

2012ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இன்போசிஸ் அமெரிக்காவில் தனது நிறுவனத்தை வரிவாக்கம் செய்தது, மேலும் ஹார்லி டேவிட்சன் நிறுவனத்திற்கு சிறப்பான சேவையை அளிக்க விஸ்கானசன் நிறுவனத்தில் ஒரு புதிய டெலிவரி சென்டரை உருவாக்கியது.

சண்டை

சண்டை

இந்த ஒப்பந்தத்தை கைபற்ற இரு நிறுவனங்களும் போட்டி போடும் நிலையில் யாருக்கு கிடைத்தாலும் மற்ற நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கும். மேலும் இன்போசிஸ் நிறுவனத்தில் உயர் நிர்வாகம் நிலையில்லாமல் உள்ளது, இதை ராக்வெல் ஆட்டோமேஷன் கண்டிப்பாக ஆய்வில் உட்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+