மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய ஆட்சி அமைந்ததை தொடர்ந்து இந்தியாவில் நிலையான ஆட்சி அமைந்து சீர்திருத்தங்கள் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பின் காரணமாக அந்நிய முதலீடு அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் இந்தியா சந்தையில் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

பங்கு சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி வெளியிட்ட அறிக்கையின் தகவல் படி கடந்த ஒராண்டு காலத்தில் அன்னிய முதலீடாக இந்திய கடன் சந்தையில் சுமார் 52,115 கோடி ரூபாயும், பங்குசந்தையில் 51,433 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
எனவே கடன் சந்தை மற்றும் பங்குசந்தை அகிய இரண்டையம் சேர்த்து 1,03,548 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. இதில் ஜூன் மாதம் மட்டும் 11,625 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய சந்தைகளில் அன்னிய முதலீடு அதிகரித்ததால் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 20 சதவீதம் உயர்ந்திருக்கிறது. கடந்த நிதியாண்டில் இந்திய சந்தையில் செய்யப்பட்ட மொத்த அந்நிய முதலீடு 62,288 கோடி ரூபாய் மட்டுமே.


Click it and Unblock the Notifications