விஷால் சிக்கா இன்!! நாராயண மூர்த்தி, ரோஹன் மூர்த்தி ஆவுட்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களுரூ: இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓ-கான தேடுதல் வேட்டை ஒரு வழியாக முடிந்தது. பல குழப்பத்திற்கு பிறகு இன்போசிஸ் நிறுவனத்தின் புதிய சீஇஓவாக விஷால் சிக்கா அவர்களை இந்நிறுவனத்தின் நிர்வாக குழு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை இன்போசிஸ் நிறுவனம் இன்று வெளியிட்டது.

இதுமட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் நிர்வாக தலைவரான நாராயாண மூர்த்தி மற்றும் நிர்வாக துணை தலைவர் எஸ். கோபாலகிருஷ்ணன் ஆகியோர் ஜூன் 14ஆம் தேதி நிர்வாக பொறுப்புகளில் விலகுகின்றனர். அதேபோல் நாராயாண மூர்த்தி அவர்களின் மகன் ரோஹன் மூர்த்தியும் ஜூன் 14ஆம் தேதி நிறுவன பொறுப்புகளில் இருந்து விலகுகிறார்.

மேலும் இன்போசிஸ் நிறுவனத்தின் தற்போதிய சீஇஓவான ஷிபுலால் அவர்கள் மார்ச் மாதம் விலகல் பிறகு முழுமையாக ஏற்க உள்ளார் என இந்நிறுவனம் பங்கு சந்தையில் சமர்ப்பித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விஷால் சிக்கா

விஷால் சிக்கா

அவர் பரோடாவில் தனது பள்ளி மற்றும் இளநிலை பட்ட படிப்பை முடித்தார். பின்பு தனது மேல் படிப்பை ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார், மேலும் டாக்டர் பட்டமும் பெற்றார்.

இவர் தந்தை இந்தியன் ரயில்வே துறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடதக்கது.

 

சிக்காவும் ஜெராக்ஸூம்

சிக்காவும் ஜெராக்ஸூம்

சிக்கா தனது படிப்பை முடித்தது, ஜெராக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். சில வருடங்களுக்கு பிறகு இவரின் சகோதரன் உடன் ஐபிரைன், போதா.காம் என்ற வெற்றி நிறுவனங்களை துவங்கி பின்பு பெரு நிறுவனங்களுக்கு தனது நிறுவனத்தை விற்றார்.

எஸ்.ஏ.பி

எஸ்.ஏ.பி

சிக்கா 2002ஆம் ஆண்டு எஸ்.ஏ.பி நிறுவனத்தில் சேர்ந்தார். 2007ஆம் இவர் இந்நிறுவனத்தின் சீஇஓவாக பதவி உயர்வு பெற்றார்.

அதிரடி முடிவு

அதிரடி முடிவு

சில மாதங்களுக்கு முன்பு சிக்கா எஸ்.ஏ.பி நிறுவனத்தில் இருந்து திடீரென வெளியேறினார். இதனால் ஜெர்மனி நாட்டு நிறுவனமான எஸ்.ஏ.பி சற்று தடுமாறியது. மேலும் இவரது பணி விலகல் செய்தி பிரபல பத்திரிக்கைகளில் முக்கிய இடங்களை பிடித்தது.

இன்போசிஸ் குறி

இன்போசிஸ் குறி

சிக்காவின் விலகல் இன்போசிஸ் நிறுவனத்திற்கு சாதகமாக அமைந்தது, இவரது விலகல் செய்தி வெளியான முதலே இன்போசிஸ் நிறுவனம் இவரை நேரடியாக அனுகியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vishal Sikka, ex-SAP executive, appointed as Infosys CEO & MD; Narayana Murthy steps down

Vishal Sikka, a former SAP AG executive board member was on Thursday appointed as Infosys' Chief Executive Officer and MD. With his appointment, Sikka becomes the first non-founder CEO of Infosys.
Story first published: Thursday, June 12, 2014, 12:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X