டெல்லி: இந்தியாவில் மொபைல் சேவை அளித்து வரும் யூனினார் நிறுவனத்தை ரூ.780 கோடி முதலீட்டுன் முழுமையாகக் கைபற்ற நார்வேயின் டெலினார் குழுமம் திட்டமிட்டுள்ளது.
டெலினார் நிறுவனம் இதற்கான விண்ணப்பத்தை அந்நிய முதலீட்டு மேம்பாட்டுக் கழகத்தில் ஒப்படைத்துள்ளது, மேலும் அதன் அனுமதிக்காக டெலினார் காத்துக் கொண்டிருக்கிறது.
யூனினார் - டெலினார்
யூனினார் நிறுவனத்தின் 74 சதவீத பங்குகளை ஏற்கனவே டெலினார் நிறுவனம் வைத்துள்ளது. ஏனைய பங்குகள் லக்ஸ்தீப் இன்வெஸ்ட்மெண்ட்ஸ் என்ற நிறுவனத்தின் வசம் உள்ளது.
வாடிக்கையாளர்
இந்தியா முழுவதும் சுமார் 3 கோடி பேர் யூனினார் மொபைல் நிறுவனத்தின் வாடிக்கையாளராக உள்ளனர். இந்நிறுவனம் விரைவில் அஸ்ஸாமிலும் தன் சேவையைத் தொடங்க உள்ளது.
விரிவாக்க பணிகள்
மேலும் இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டில் தன்னுடைய நெட்வொர்க்கை விரிவாக்க ரூ.500 கோடி முதலீடு செய்யப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
டெலினார்
இந்த நிலையில் யூனினார் நிறுவனத்தை முழுவதுமாக வாங்க டெலினார் முடிவெடுத்துள்ளது. இதற்காக மேலும் ரூ.780 கோடிகளை இறக்குகிறது.
ஸ்பெக்ட்ரம் ஏலம்
மேலும் 5 முதல் 7.2 மெகாஹெர்ட்ஸ் வரையிலான அலைக்கற்றைகளைக் கைப்பற்றும் முயற்சியிலும் இறங்கி, அதற்கான ஏலத்திலும் டெலினார் பங்கெடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications